சர்ச்சைகளுக்கு மத்தியில் காதலை உறுதிப்படுத்திய த்ரிஷா! அவரே வெளியிட்ட பதிவு வைரல்
தமிழக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொண்ட நடிகை த்ரிஷா செம கியூட் புகைப்படங்களைபகிர்ந்து, காதல் பற்றி போட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
த்ரிஷா - விஜய் சர்ச்சை
விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் த்ரிஷாவை மற்றும் மற்றும் விஜய் பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையாக கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

முன்னாள் நடிகரும் தற்போதைய தமஜழக முதல்வருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், அதனை தொடர்ந்து ஒரு திருமண நிகழ்ச்சிக்கு த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் ஜோடியாக வந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதற்கு பின்னரும் பல்வேறு விமர்சனங்கள் அவர்கள் மீது வந்த நிலையில் அதை பற்றி விஜயும் சரி த்ரிஷா எந்தவித விளக்கமும் இதுவரையில் கொடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தவெக தலைவர் C ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியை ஏற்றுக்கொண்டார் இந்த நிகழ்வில் த்ரிஷாவும் அழகிய சேலையில் தலையில் மல்லிபூவுடன் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

குறித்த விடயம் இணையத்தில் வைராலாகியது. அத்துடன் நிறுத்தாமல் மீண்டும் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, காதல் எப்போதும் உரத்த குரலில் ஒலிக்கும்.... என பதிவிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பி வருகின்றது. இந்த பதிவு த்ரிஷாவின் காதலை உறுதிப்பதுத்தும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.