சர்ச்சைகளால் கடுப்பாகிய நடிகை த்ரிஷா! வைரலாகும் சாட்டையடி ரிப்ளை
நடிகை த்ரிஷா சர்சைகளுக்கு மத்தியில் தமிழக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொண்ட விடயம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், வதந்திகளை பரப்புவது குறித்து த்ரிஷா பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
த்ரிஷா - விஜய் சர்ச்சை
முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழக முல்வருமான விஜய் சங்கீதா விவாகரத்து விவகாரத்தின் பின்னர் த்ரிஷா மற்றும் விஜய் பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையான கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், அதனை தொடர்ந்து ஒரு திருமண நிகழ்ச்சிக்கு த்ரிஷா மற்றும் விஜய் இருவரும் ஜோடியாக ஒரே நிற ஆடையில் வந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்தது.

அதற்கு பின்னரும் பல்வேறு விமர்சனங்கள் அவர்கள் மீது வந்த நிலையில் அதை பற்றி விஜயும் சரி த்ரிஷா எந்தவித விளக்கமும் இதுவரையில் கொடுக்கவில்லை.

அது ஒரு புறம் இருக்க, முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலும் த்ரிஷாஅழகிய சேலையில் தலையில் மல்லிபூவுடன் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதுவும் இணையத்தில் வைராலானது.

அத்துடன் நிறுத்தாமல் மீண்டும் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, காதல் எப்போதும் உரத்த குரலில் ஒலிக்கும்.... என பதிவிட்டுள்ளார். குறித்த விடயம் மீண்டும் பெர்ம் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், இணையத்தில் பரவிவரும் வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் குறித்து, nothihg's better than gossiping with someone with someone who's as mean as you... என ஆரம்பிக்கும் பிரபலமாக காணொளியை பகிர்ந்துள்ளார். அதன் மூலம் த்ரிஷா குறித்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.