சர்ச்சைகளுக்கு மத்தியில் த்ரிஷா போட்ட புதிய பதிவு!
நடிகை த்ரிஷா மற்றும் விஜய் ஜோடியாக ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில் தனது இன்ஸ்ட்டா கிராம் பக்கத்தில் த்ரிஷா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
விஜய் -த்ரிஷா சர்ச்சை
நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார்.

அவர் குறித்த நடிகையுடன் வெளிநாட்டுக்கு செல்வது, நிகழ்ச்சிக்கு செல்வது என வெளியில் செல்லும்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது குடும்பத்திற்கு பெரிய அவமானத்தையும் தனக்கு மனஅழுத்தத்தையும் ஏற்படுத்தியது என சங்கீதா மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

நிலையில், விஜய் ரசிகர்கள் இதுவரையில் விஜய்கு ஆதரவாக பேசி சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
ஆனால் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு விஜய் நடிகை த்ரிஷா உடன் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்தது மாத்திரமன்றி விஜயுடன் ஒன்றாக நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

குறித்த விடயம் சங்கீதா அளித்த புகாரை நிரூபிப்பது போல இருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக தாக்கி பதிவிட்டு வருகின்றனர்.
புதிய பதிவு
இந்நிலையில், செம எதையும் காதில் வாங்காதது போல், த்ரிஷா ஒரு பதிவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் விஜயுடன் வந்த அதே ஆடையுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு "Thank you for always being my go-to people" என குறிப்பிட்டு தன்னை ஆதரிப்பவர்களுக்கு நன்றி கூறி உள்ளார். குறித்த பதிவு இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |