த்ரிஷா என் காதலி... விரைவில் கல்யாணம் செய்யப்போறேன் - ஏ.எல்.சூர்யா பரபரப்பு பேச்சு!
த்ரிஷாவை நான் காதலிக்கிறேன் என்றும், அவரை நான் விரைவில் திருமணம் செய்யப்போகிறேன் என்று ஆன்மீக சிந்தனையாளர் ஏ.எல்.சூர்யா பரபரப்பாக பேசியுள்ள தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏ.எல்.சூர்யா
சமூகவலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பிரபலமானவர்தான் ஏ.எல்.சூர்யா. இவர் தன்னை ஒரு ஆன்மீக சிந்தனையாளர் என்று கூறிக்கொள்கிறார். இவர் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு ஏ.எல்.சூர்யா நடிகை பத்மபிரியாவை வைத்து ஒரு ஆல்பம் வீடியோவை படமாக்கினார். அப்போது, ஒளிப்பதிவாளர் லட்சுமி பிரபாகரிடம் பத்மபிரியாவின் போன் நம்பரை கேட்டு தொல்லை கொடுத்தாக ஏ.எல்.சூர்யாவின் மீது ஒரு புகார் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, விஜய், விக்ரம் போன்ற முன்னிணி நடிகர்கள் குறித்து சர்ச்சையாக பேசி சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி விடுவார்.
த்ரிஷாவை விரைவில் கல்யாணம் செய்வேன்
இந்நிலையில், சமீபத்தில் ஒரு சேனலுக்கு ஏ.எல்.சூர்யா பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில், த்ரிஷாவை தான் காதலித்து வருகிறேன். ‘லியோ’ படத்திலிருந்து த்ரிஷா வெளியேறவேண்டும்.
எனக்கு விஜய் மீது கடும் கோபம் உள்ளது. த்ரிஷாவை தான் விரைவில் திருமணம் செய்ய போகிறேன். அவரை நான் காதலித்து வருகிறேன் என்றார். உடனே, தொகுப்பாளர் த்ரிஷாவை எப்போது பார்த்தீர்கள்? ஏன் விஜய் மீது இவ்வளவு கோபம்? என்று கேட்க, அதெல்லாம் கூறமுடியாது என்று ஏ.எல்.சூர்யா கூறியுள்ளார்.
தான் கலந்து கொள்ளும் எல்லா பேட்டிகளிலும், த்ரிஷாவை குறித்தே பேசிவருகிறார் ஏ.எல்.சூர்யா.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.