சுதந்திர தின புகைப்படங்களை பகிர்ந்த த்ரிஷா! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்
நடிகை த்ரிஷா : இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தில் சென்னையில் உள்ள புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்துகொண்டு, தனது பதவிக்காலத்தில் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்வில் நடிகை த்ரிஷா பங்கேற்றது இணையத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், சுதந்திர தின நிகழ்வில் கலந்துக்கொண்ட உடையில் அழகிய போட்டோ ஷூட் நடத்தி த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வழக்கமாக த்ரிஷாவின் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவியும் ஆனால், வழக்கத்துக்கு மாறாக த்ரிஷாவை நெட்டிசன்கள் கண்டபடி திட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகை த்ரிஷா
முன்னாள் நடிகரும் தற்போதைய தமிழக முல்வருமான விஜய் சங்கீதா விவாகரத்து விவகாரத்தின் பின்னர் த்ரிஷா மற்றும் விஜய் பற்றிய பல்வேறு வதந்திகளும் சர்ச்சையான கருத்துக்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது என்பது அனைவரும் அறிந்தது தான்.

அதனால் த்ரிஷா வெளியிடும் அனைத்து பதிவுகளும், புகைப்படங்களும் இணையத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்து வருகின்றது. ஆனால் சர்ச்சைகளுக்கெல்லாம் செவி சாய்க்காது இவர் தனது வேலையில் மாத்திரம் கவனம் செலுத்தி வருகின்றார்.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை சங்கீதா திரும்ப பெற்ற நிலையில், சுதந்திர தின நிகழ்வில் சங்கீதா கலந்துக்கொள்வார் என்ற எதிர்பார்பில் விஜய் ரசிகர்களும் தவெக கட்சி தொண்டர்களும் இருந்தனர்.

ஆனால் சுதந்திர தின நிகழ்வில் முதல் வரிசையில் த்ரிஷா அமர்ந்தது இணையத்தில் பெரிய சர்சையாகவே மாறியது. இந்நிலையில் சுதந்திர தின நிகழ்வில் கலந்துக்கொண்ட உடையில் அழகிய போட்டோ ஷூட் நடத்தி த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படத்துக்கு கீழ் பலரும் த்ரிஷாவின் செயல் குறித்து நேரடியாகவே கேள்வியெழுப்பி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |