த்ரிஷா முதல் சங்கீதா வரை - விஜய்யின் முதல்வர் பதவியேற்பில் களைகட்டிய கூட்டம்
தமிழக முதலமைச்சராக தளபதி விஜய் இன்று பதவி ஏற்றார். இதில் த்ரிஷா முதல் சஙகீதா வரை அனைவரும் கலந்துகொண்டனர்.

முதல்வராகிய விஜய்
233 தொகுதிகள் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் பின்னர் ஆட்சி அமைப்பதற்கு 118 தொகுதிகள் தேவைப்பட்டது ஆனால் விஜய்க்கு இடம் கிடைக்கவில்லை.
இதன் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இன்று 9 அமைச்சர்களும் முதலமைச்சராக விஜய்யும் பதவி ஏற்றனர்.

பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த நேரு ஸ்டேடியத்தில் பல்வேறு சினிமா பிரபலங்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், தவெக தொண்டர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
விஜய்யுடன் சேர்த்து இந்த நிகழ்வில் ஆனந்த், ஆதார் அர்ஜுனா, அருண் ராஜ், வெங்கட்ராமன், செங்கோட்டையன், நிர்மல் குமார், ராஜ்மோகன், காரைக்குடி எம்எல்ஏ பிரபு, சிவகாசி எம்எல்ஏ கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

கலந்துகொண்ட பிரபலங்கள்
பல சர்ச்சைகளிலும் த்ரிஷா ஒருபோதும் விஜய்யை விட்டுக்கொடுக்காமல் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
விழாவிற்கு வந்த த்ரிஷா விஜய் அம்மாவை பார்த்து பேசியது மற்றும் அவர் விழாவிற்கு கலந்துகொண்டது சர்ச்சையாக தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

மேலும் நடிகை சங்கீதா மற்றும் அவரது கணவர் கிரிஷ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் தலைவர் சண்முகம், வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |