தைரியமாக இருங்க! த்ரிஷாவுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்- ஏன்?
முதலமைச்சர் விஜய் பங்கேற்று கொடியேற்றிய சுதந்திர தினவிழாவில் பங்கேற்றார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன்.
முதல் வரிசையில் அவர் அமர்ந்திருக்க விஜய் சல்யூட் அடிக்க பதிலுக்கு த்ரிஷாவும் சல்யூட் அடித்தார், இந்த வீடியோ காட்சிகள் வைரலாகின.
அத்துடன் த்ரிஷா அன்றைய தினம் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட கமெண்டுகள் குவிந்தது.

உங்களை யார் முதல் வரிசையில் அமரவைத்தது? நீங்கள் ஏன் வந்தீர்கள்? எங்க அண்ணாவை விட்டுவிடுங்கள் என பலதரப்பட்ட எதிர்மறையான கமெண்டுகள் குவிந்தது.
இந்நிலையில் இவருக்கு ஆதரவாகவும் கமெண்டுகள் பதிவாகிறது, முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு அவ்வளவு எளிதில் அழைப்பு இல்லாமல் யாரும் வரமுடியாது, முறையான அழைப்பு இருந்ததால் மட்டுமே அவர் வந்துள்ளார், த்ரிஷாவை குறை கூறுவதை நிறுத்துங்கள் என கூறுகின்றனர்.
அத்துடன் தைரியமாக இருங்கள், குறை சொல்வதை கண்டுகொள்ளாதீர்கள் எனவும் ஹார்ட்டுகளை பறக்கவிட்டுள்ளனர்,
