எதிரியாக மாறிய திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய்! பலரும் அறியாத படப்பிடிப்பில் நடந்த சர்ச்சை
பொன்னியின் செல்வன் படத்தின் கதைப்படி நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக நடித்துள்ள திரிஷாவும் எதிரிகள்.
நடிகை திரிஷா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்த திரிஷா, கடந்த சில ஆண்டுகளாக நடித்த படங்கள் தோல்வியடைந்த நிலையில், 96 படத்திற்கு பின்பு பொன்னியின் செல்வன் படம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் உச்சத்திற்கு செல்ல வேண்டும் என்று இருக்கும் திரிஷாவின் ஆசை நிறைவேறுமா என்பதை வரும் 30ம் தேதி தெரிந்து கொள்ளலாம்.
மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் 30ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் திரிஷா.

எதிரியாக மாறிய திரிஷா ஐஸ்வர்யா ராய்
நடிகை திரிஷா, படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து, சக நடிகர், நடிகைகள் பற்றியும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்து வரும் நிலையில், தற்போது நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் பற்றி கூறி உள்ளார்.
இப்படத்தின் கதைப்படி நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக நடித்துள்ள திரிஷாவும் எதிரிகள். இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சியும் படத்தில் உள்ளது.
அப்படி இருக்கையில் படப்பிடிப்பு தளத்தில் இருவரும் மிகுந்த நட்புடன் பழகி வந்தார்களாம். ஒருநாள் ஷூட்டிங் இடைவெளியின் போது இருவரும் பேசி சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்த இயக்குனர் மணிரத்னம், இருவரிடமும் வந்து நீங்கள் இருவரும் பேசிக்கொள்ளக்கூடாதுனு சொல்லினாராம். இப்படி இருவரும் பேசினால் அது படத்தில் உங்கள் கேரக்டரை பாதிக்கும் என கூறினாராம்.