இவர்களுக்கு ஆபத்து நிச்சயம்.. 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்
ஜோதிடத்தின் படி, சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக இருக்கிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறுவார்.
தற்போது சொந்த ராசியில் சூரியன் பயணித்து வரும் அதே சமயம், அதன் நிழல் கிரகமான கேதுவும் சிம்மத்தில் பயணிக்கிறார். இந்த பெயர்ச்சி 18 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. கிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படும் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் அதிபதியாக இருக்கிறார்.
இவர், ஆகஸ்ட் 30 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் பயணிக்கிறார். இந்த பெயர்ச்சிகளால் சிம்ம ராசியில் சூரியன், கேது மற்றும் புதன் சேர்க்கை நிகழ்கிறது. இதன் விளைவாக திரிகிரிக யோகம் உருவாகியுள்ளது.
சக்தி வாய்ந்த சுப யோகங்களுள் ஒன்றாக பார்க்கப்படும் திரிகிரிக யோகத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இது சிலருக்கு அதிர்ஷ்டத்தையும் சிலருக்கு கவலையையும் கொடுக்கும்.
அந்த வகையில், ஜோதிட சாஸ்த்திரன்படி, திரிகிரிக யோகத்தால் வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளை சந்திக்கப்போகும் ராசிகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
திரிகிரக யோகத்தின் விளைவுகள்
ரிஷபம் | ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சிக்கல்கள் வரலாம். குடும்ப பொறுப்புக்கள் அதிகரிப்பதால் மனதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரும். தூக்கம் பிரச்சினை, செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் வரும். பணம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் சிக்கல்கள் அதிகமாக இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். |
கன்னி | கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு 12 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளதால் பணியிடத்தில் அதிகமான வேலை இருக்கும். சரியான நேரத்தில் முடிவு எடுக்க முடியாது. நிதி ரீதியான அழுத்தங்கள் இருக்கும். குடும்ப வாழ்க்கை பல இன்னல்கள் வர வாய்ப்பு உள்ளது. கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும். நிதி நிலையில் சமநிலையற்ற நிலை இருப்பதால் வீட்டில் நிம்மதி இருக்காது. |
மகரம் | மகர ராசியில் பிறந்தவர்களுக்கு 8 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளதால் புதிய வாய்ப்புக்கள் தள்ளப்போகும். குடும்பத்தில் பல வாய்தகராறுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் பிரச்சினை இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பொறுமையாக இருந்து அனைத்தையும் பாதுகாப்பது அவசியம். பிரிவுகள் சில சமயங்கள் அதிகமான அழுத்தங்களை கொடுக்கலாம். கவனமாக இருக்க வேண்டும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
