குழந்தைகள் காய்கறிகளை விரும்பி சாப்பிடுவதில்லையா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
குழந்தைகளை காய்கறிகள் விரும்பி சாப்பிட வைப்பதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
காய்கறிகள்
காய்கறிகள் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. இதிலுள்ள வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, நீர்ச்சத்து என பல நன்மைகள் இருக்கின்றது.
அதாவது எதிர்காலத்தில் வரக்கூடிய இதய நோய், பக்கவாதம், புற்றுநோய் போன்ற நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க உதவுகின்றது.
முக்கியமாக பெற்றோர்கள் காய்கறிகளை விரும்பி சாப்பிடுவதை அவதானித்தால் அவர்களும் சாப்பிடுவார்களாம்.
குழந்தைகளை எவ்வாறு பழக்குவது?
புடலங்காய், பீர்க்கங்காய், கத்திரிக்காய் போன்ற காய்களை பெரும்பாலான குழந்தைகள் விரும்புவதில்லை. அவற்றை வெட்டும்போதும், பரிமாறும்போதும் வித்தியாசமான வடிவங்களில், சிறு துண்டுகளாக மாற்றி கொடுங்கள்.
குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டு பொருட்களின் வடிவில் காய்கறிகளை உருவாக்கி கொடுத்தால், அவர்கள் ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள்.
மேலும் குழந்தைகள் சில காய்கறியை விரும்பாமல் உள்ளது என்றால் அதனை முற்றிலும் ஒதுக்கிவிடக்கூடாது. அடுத்தடுத்து முயற்சி செய்து சாப்பிட வைக்கவும்.
காய்கறிகளை வாங்க கடைக்கு அழைத்து சென்று, அவற்றை பார்க்கவும், நுகரவும், உணரவும் அனுமதியுங்கள்.
காய்கறிகளை கழுவுவது, எடுத்து வைப்பது போன்ற சிறு வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தினால், அவர்கள் காய்கறிகளை விரும்பி சாப்பிடுவதற்கு ஆசைப்படுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |