உங்கள் Smart Phone ஐ வைரஸ் தாக்கி இருக்கா? இந்த சூப்பர் டிரிக்ஸை வைத்து கண்டுப்பிடிச்சிக்கோங்க!
ஸ்மார்ட்போன்களுக்கு வைரஸ் அச்சுறுத்தல்கள் இருந்து கொண்டே இருக்கிறது. இதனை எப்படி கண்டுப்பிடிப்பது என்று எம்மில் பலருக்கு தெரியாது.
எண்ணெயை கண்ணில் ஊற்றிக்கொண்டு பார்த்து கொண்டிருந்தாலும்கூட, புறவாசல் வழியாக வைரஸ்கள் செல்போன்களுக்குள் நுழைந்துவிடுகின்றன.
அதாவது முன்னெச்சரிக்கயாக இருக்கும் சமயங்களில்கூட வைரஸ், ட்ரோஜன் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க முடிவதில்லை.
இந்தமாதிரியான சூழல்களில் சில டிரிக்ஸைக் பயன்படுத்தி உங்கள் செல்போனில் வைரஸ் இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
இது குறித்த முழுமையான விளக்கத்தை அறிந்து கொள்ள இந்த குறிப்புகள் நிச்சயம் உங்களுக்கு உதவி புரியும்.
- உங்கள் அனுமதி இல்லாமல் செயலிகள் அல்லது வேறு ஏதேனும் ப்ரீமியம் பயன்பாடுக்காக உங்கள் அக்கவுண்டில் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அல்லது, உங்களின் அனுமதி இல்லாமலேயே ப்ரீமியம் மெசேஜ் அல்லது அழைப்புகள் செல்லும்.
- அதிகப்படியான விளம்பரங்கள் உங்கள் செல்போனில் தோன்றிக்கொண்டிருந்தால், விளம்பரம் தொடர்பான ட்ரோஜன் அல்லது வைரஸ் உங்கள் செல்போனுக்குள் நுழைந்திருக்கலாம்.
- உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அப்போது, உங்களின் தொடர்பில் உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
- உங்கள் ஸ்மார்ட்போனின் செயல்திறன் முன்புபோல் இருக்காது. அடிக்கடி ஹேங்க் ஆகும் அல்லது மிகவும் ஸ்லோவான ஸ்பீடில் புரோகிராம்கள் இயங்கும்.
- புதிய செயலிகள் உங்கள் அனுமதியில்லாமல் பதிவிறக்கமாகியிருக்கும். அப்படி இருந்தால் உடனடியாக உஷாராகிக்கொள்ளுங்கள்.
- விரைவாக டேட்டா தீர்ந்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கலாம். ஏனென்றால், அவையே டேட்டாக்களை அதிகம் யூஸ் செய்யும்.
- பேட்டரி திடீரென குறையும், போன் சூடாகவும். இவையெல்லாம், உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ்கள் இருப்பதற்கான அறிகுறி.