ஏப்ரலில் 6 முறை உருவாகும் ஒரே யோகம் : நிதி நிலையில் இந்த ராசிகளுக்கு அசுர வளர்ச்சி உறுதி!
ஜோதிட ரீதியில் நவகிரங்களின் பெயர்ச்சி மற்றும் கிரங்களின் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகங்கள் என்பன 12 ராசிகளின் வாழ்விலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில், இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 60 டிகிரியில் இருக்கும் போது உருவாகும் மங்களகரமான திரி ஏகாதச யோகமானது ஏப்பல் மாதத்தில் மிகவும் அரிதான 6 முறை உருவாகப்போகின்றது.

குறித்த யோகம் உருவாகும் போதெல்லாம் குறிப்பிட்ட சில ராசி நட்சத்திரத்தில் பிறப்பெடுத்தவர்கள் தொழில் வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலையில், பெருமளவில் மாற்றம் உண்டாகும் என ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
அப்படி ஏப்ரல் மாதத்தில் 6 முறை உருவாகும் இந்த அரிய யோகத்தின் அதிர்ஷ்ட பலன்களை மொத்தமான அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்

ஏப்ரல் மாதத்தில் 6 முறை உருவாகும் திரி ஏகாதச யோகத்தால் சிம்ம ராசியினரின் தொழில் வாழ்க்கையில் அமோகமான வெற்றிகள் கிட்டும் வாய்ப்பு காணப்படுகின்றது.
எதிர்பாராத வகையில் பெரியளவில் பணவரவு கிடைக்கும். புதிய வழிகளில் வருமானம் வருவதற்கான வழிகள் திறக்கும். நீண்ட நாட்களாக போரடிய விடயங்கள் எளிதாக நடக்கும் பிராப்தம் காணப்படுகின்றது.
குறிப்பாக பணியிடத்தில் சக ஊழியர்களுடன் நீண்ட நாட்களாக இருந்துவந்த கருத்து வேறுப்பாடுகள் நீங்கும். உயர் பதிவியில் அமரும் வாய்ப்பு காணப்படுகின்றது. இந்த ராஜ யோகத்தால் பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
மகரம்

6 முறை உருவாகும் குறித்த திரி ஏகாதச யோகத்தால் மகர ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கையில், இதுவரையில் இல்லாத அளவுக்கு சாதக மாற்றங்கள் நிகழும்.
பொருளாதாராத்தில் மாற்றம் நிகழ்வதை கண்கூடாக பார்க்கக்கூடியதாக இருக்கும். வியாபரிகளுக்கு இரண்டிப்பு லாபம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. முன்னைய முதலீடுகளில் இருந்து பெரிய தொகை பணம் லாபமாக வரும்.
தனிப்பட்ட வாழ்வில் இருந்துவந்த கருத்து வேறுப்பாடுகள் மற்றும் கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். மொத்தில் ஏப்ரல் முழுவதும் ராஜ வாழ்க்கை உறுதி.
விருச்சிகம்

திரி ஏகாதச யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்வில் பல்வேறு வழிகளிலும் நல்ல திருப்பங்கள் நிகழும். நீண்ட கால ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அமையும்.
கொடுத்த கடனை திரும்ப பெற முடியாமல் போராடி வந்தவர்களுக்கு வட்டியுடன் திரும்ப பெறும் யோகம் காணப்படுகின்றது. பணத்தை சரியான துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
திருமண வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, நிதி நிலை ஆகிய அனைத்திலும் பெருமளவான அதிர்ஷட பலன்களை விருச்சிக ராசியினர் அனுபவிப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |