பேரன்களுடன் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் தாத்தா ரஜினி! ட்ரெண்டாகும் மகள் ஐஸ்வர்யா ...தனுஷ் இல்லையே
நடிகர் ரஜினிகாந்த் தனது பேரன்களுடன் தீபாவளியை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை மகள் ஐஸ்வர்யா சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறி வருவதுடன், தனுஷ் தான் இல்லை என்று கவலை வெளியிட்டு வருகின்றனர்..
மாறிப்போன தனுஷின் வாழ்க்கை
இந்த ஆண்டு தனுஷ் திரையுலக வாழ்க்கையில் வெற்றிகரமான ஒன்று.
கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என அனைத்து படத்திலும் தனுஷிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்த ஆண்டின் சந்தோஷம் அவருக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
இரண்டு மகன்களுடன் ஒன்றாக அனைவரும் கடந்த ஆண்டு கொண்டாடிய தீபாவளி போல் இந்த ஆண்டு இல்லை. எனினும் ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினிகாந்த் தாயார் லதா மற்றும் மகன்களுடன் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடியுள்ளார்.
அந்த புகைப்படங்களில் பேரன்கள் கொண்டாடுவதை தாத்தா ரஜினிகாந்த் சந்தோஷம் பார்ப்பது ரசிக்கின்றார்.
இந்த சந்தோஷம் என்றும் நிலைக்க வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.