மொத்தம் எத்தனை வரிக்குதிரைகள் இருக்கிறது? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
இந்த புகைப்படத்தை பார்க்கும் போது குதிரைகள் வரிசையாக நடந்து செல்வது போல தெரிகிறது.
ஆனால் குதிரைகள் எல்லாம் கருப்பு நிற நிழலாகதான் தெரிகிறது.
அதிக வெயில் மற்றும் கேமரா ஆங்கில் காரணமாக இப்படியாக இருப்பதாக நாம் நினைப்போம் ஆனால் இந்த புகைப்படத்தை பதிவிட்டவர் இதில் எத்தனை வரிக்குதிரை இருக்கிறது என கண்டுபிடியுங்கள் என பதிவிட்டுள்ளார்.
இதில் எப்படி வரிக்குதிரையை கண்டுபிடிப்பது என யோசித்து இந்த புகைப்படத்தை உற்று பார்க்கும் தான் தெரிகிறது. நாம் பெரிதாக பார்த்தது குதிரைகளின் உருவம் அல்ல அதன் நிழல்கள் தான் என்று.
இந்த புகைப்படம் டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது சூரியன் காலை ,அல்லது மாலை வேலையில் இருப்பது போல தெரிகிறது. இதனால் நிழல் பெரிதாக தெரிகிறது.
இதனால் பார்ப்பதற்கு கருப்பு உருவம் செல்வது போல தெரிகிறது. இதனால் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.