கால் பாதங்களில் ஆணியா? ஒரு தடவை தடவினால் போதும் வேரோடு எடுத்து விடும் சூப்பரான டிப்ஸ்
பொதுவாக மழைக்காலங்களில் அல்லது மலைப்பகுதியில் நடந்து செல்லும் போது கால்களில் கற்கள் மற்றும் முற்களினால் அழுத்தம் ஏற்படுவதை தொடர்ந்து காலில் ஆணி வளர ஆரம்பிக்கிறது.
இவ்வாறு உருவாகும் ஆணி என்பது இறந்த தோலின் சிறிய திட்டுகளை உள்ளடக்கியது தொகுதிளை குறிப்பிடுவார்கள்.
இதன்படி, கால்களில் வரும் ஆணி அடி பாதத்தில் எரிச்சல் ஏற்படுத்தும் இதனை ஆரம்பத்தில் பார்க்காவிட்டால் காலை எடுக்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.
இது மட்டுமன்றி இறுக்கமான காலணிகள் மற்றும் பெண்கள் உபயோகிக்கும் ஹை ஹீல்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவதாலும் கால்களில் ஆணி வளருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இவ்வாறு கால்களில் வளரும் ஆணிகள் மூன்று வகையாக பிரித்து பார்க்கப்படுகிறது.
கடினமான கால் ஆணி
கடினமான கால் ஆணி என்பது இறந்த தோல்களின் சிறிய திட்டுகளை உள்ளடக்கியது. இந்த ஆணி தமது கால் விரல்களில் தோன்றும்.
இந்த பகுதியில் தோன்றுவதால் காலில் இருக்கும் எலும்பில் அழுத்தம் ஏற்பட ஏற்பட ஆணி கடினமாக மாறுகிறது. இதனையே கடினமான கால் ஆணி என்கிறார்கள்.
மென்மையான கால் ஆணி
இந்த ஆணி கால்களில் மென்மையானவையாகவும் மற்றும் தொடும் போது ரப்பர் போன்ற உணர்வையும் தரக்கூடியதாக இருக்கும்.
இது பார்ப்பதற்கு சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும். இது கால்விரல்களுக்கு இடையே உள்ள பகுதியில் தோன்றுகிறது.
விதை கால் ஆணி
இந்த விதை கால் ஆணி பொதுவாக கால்களின் அடிப்பகுதியிலிருக்கும் தோன்றும்.
இதனை தொடர்ந்து கால்களில் வளரும் ஆணிக்கு என்ன மருந்து போடலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
ஒரு தடவை தடவினால் போதும்
- மேற்குறிப்பிட்ட வகையில் கால்களில் ஆணி வளர்ந்தால் அம்மான் பச்சரிசி பாலை கால்களில் ஆணி உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் காலப்போக்கில் அது சரியாகும்.
- மேலும் அமிர்த வெண்ணெய் மற்றும் வங்க வெண்ணெய் கால்களில் வளரும் ஆணிக்கு சிறந்தது. இதனை கால்களில் ஆணி உள்ள இடங்களில் தொடர்ந்து போட்டு வந்தால் மறையும்.
-
கால்களில் ஆணி வளரும் போது ஆரம்பத்தில் கொடிவேலி வேர், மஞ்சள் இவைகளை சூடுபடுத்தி பாதங்களில் ஆணி இருக்கும் இடங்களில் தடவினால் காலப்போக்கில் ஆணி மறையும்.