திருநங்கை கொடுத்த புகார் - நாஞ்சில் விஜயன் வெளியிட்ட பதிவில் சிக்கிய ரோபோ சங்கர் மருமகன்
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டார் என திருநங்கை ஒருவர் புகார் கொடுத்துள்ளதற்கு நாஞ்சில் விஜயன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நாஞ்சில் விஜயன்
சமூக வலைத்தளங்கள் மற்றும் பிரபல டிவி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகரராக பிரபலமானவர் தான் நாஞ்சில் விஜயன்.
இவர் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வயப்படுத்தி உள்ளார். இந்த நிலையில், நாஞ்சில் விஜயன் மீது ஒரு திருநங்கை அளித்த புகார், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
இந்த சூழ்நிலையில் நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
திருநங்கையின் புகார்
கொடுக்கபட்ட அந்த புகாரின்படி ஏழு வருடங்களாக நாஞ்சில் விஜயனும் அந்த திருநங்கையும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஆதரவாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக நாஞ்சில் விஜயன் தன்னிடம் பேசுவதில்லை என்றும், திடீரென விலகிச் செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
தங்கள் நட்பை மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும் என்று அந்த திருநங்கை கோரிக்கை விடுத்துள்ளார்.
நாஞ்சில் விஜயனின் இன்ஸ்டாகிராம் பதிவு
திருநங்கையின் இந்த புகார் குறித்து நாஞ்சில் விஜயன் இன்னும் வெளிப்படையாகப் பேசவில்லை. ஆனால் அதற்கு பதிலாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில், வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து சிரித்துக் கொண்டே மேடையில் பேசுவது போன்ற ஒரு புகைப்படத்திற்கு, "உன்னை பற்றி யாரு என்ன சொன்னால் என்ன... நீ இந்த காதில் வாங்கி அந்த காதில் விடு என்பது" என்ற பாடலைப் சேர்த்துள்ளார்.
இது இணையவாசிகளை ஈர்த்து வருகின்றது. இந்தப் பதிவில், ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக், "வா தலைவா வா தலைவா" என்று கமெண்ட் செய்திருக்கிறார்.
அதற்கு நாஞ்சில் விஜயன் "நன்றி ஐயா" என்று பதில் அளித்திருக்கிறார். இந்த உரையாடலின் கீழ், ரசிகர்கள் இருவரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |