Android-லிருக்கு ஐபோனுக்கு ஃபைல்களை ஈஸியாக எப்படி மாற்றுவது?
ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் உள்ள கோப்புகளை மாற்றுவது பெரிய சவாலாக இருக்கும் நிலையில், இதனை எவ்வாறு மாற்றலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Oneplus நிறுவனம்
பிரபல மொபைல் போன் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஒன்பிளஸ் நிறுவனம், இந்த செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
அதாவது அதன் சமீபத்திய OxygenOS 15 அப்டேட் செய்வதன் மூலம், யூசர்கள் ஒன்பிளஸ் டிவைஸின் ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு கோப்புகளை எளிதாக மாற்ற அனுமதிக்கின்றது.
வேகமான செயல்திறன், மேம்படுத்தப்பட்ட ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் (AI) அம்சங்கள் ஆகியவை இதன் சிறப்புகளாகும்.
எப்படி வேலை செய்கிறது?
ஐபோனுக்கு கோப்புகளை மாற்றுவதற்கு ஒன்பிளஸ் யூசர்கள் தற்போது கூடுதல் செயலிகள் எவும் இல்லாம், ‘ஷேர் வித் ஐபோன்’ என்ற அம்சத்தை பயன்படுத்தி மாற்றிக் கொள்ள முடிகின்றது.
ஒன்பிளஸ் டிவைஸில் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15-ஐ அப்டேட் செய்திருந்தால், ஐபோன் உடன் ஃபைல்களை ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கான ஆப்ஷனை நேரடியாக ஷேர் மெனுவில் காணலாம்.
இதனையடுத்து நீங்கள் ஃபைல்களைத் தேர்ந்தெடுத்து, ‘ஷேர் வித் ஐபோன்’ என்பதை என்டர் செய்த உடன், ட்ரான்ஸ்ஃபர் பிராசஸ் தொடங்குகிறது.
இதற்கு ஐபோன் யூசர்கள் ஃபைல்களை ட்ரான்ஸ்ஃபர் செய்ய ஆப் ஸ்டோரிலிருந்து O+ கனெக்ட் என்ற ஆப்-ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.
ஆனால் ஒன்ப்ளஸ் டிவைஸ்களிலிருந்து ஐபோனுக்கு மாற்றுவதற்கு எந்தவொரு சிரமம் இல்லாமல் நேரடியாகவும், விரைவாகவும் அனுப்புகின்றது.
ஐபோனுடன் கனெக்ட் செய்ய ஒன்பிளஸ் ஃபோன் தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட தற்காலிக வைஃபை ஹாட்ஸ்பாட் மூலம் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படும்.
ஆனால் இந்த செயல்பாட்டின்போது மற்ற வைஃபை நெட்வொர்க்குகளை டிஸ்கனெக்ட் செய்திருக்க வேண்டும்.
ஆண்ட்ராய்டு- டு- ஐபோன் ஃபைல் ட்ரான்ஸ்ஃபர் அம்சமானது, தற்போது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 மூலம் இயங்கும் ஒன்பிளஸ் டிவைஸ்களில் பிரத்யேகமாக கிடைக்கிறது.
இந்த அப்டேட் மூலம், யூசர்களுக்கு ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் இடையே ஃபைல்களை ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கான நீண்ட கால சவாலை எளிதாக்குகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |