மர்ம பெட்டியில் இறந்த நிலையில் இளைஞர்! கழுத்தில் காணப்பட்ட அதிர்ச்சி
ரயில் ஒன்றில் இருந்த மர்ம பெட்டியில் இளைஞர் ஒருவர் சடலமாக இருந்துள்ள சம்பவம் ஜார்கண்ட் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் இளைஞர் சடலம்
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் இருந்து பீகார் மாநிலம் பாட்னா பகுதி இடையிலான இன்டர்சிட்டி ரயில் ஒன்று டானாபூர் பிரிவில் உள்ள பாட்னா ரயில் நிலையத்தில் நின்றுள்ளது.
அத்தருணத்தில் ரயிலுக்குள் பொதுவான பெட்டியில் மூடிய நிலையில் மர்ம இரும்பு பெட்டி ஒன்று இருந்துள்ளதையடுத்து, பயணிகளுக்கு இது சற்று பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரயிலுக்குள் மர்ம இரும்பு பெட்டி ஒன்று இருந்தது பற்றி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் பெட்டியை திறந்து பார்த்த பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது.
ஆம் குறித்த மர்ம பெட்டியில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல் மடக்கி வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞரின் கயிற்றில் கயிறு ஒன்றும் இருந்துள்ளது.
கயிற்றினால் இளைஞர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் யூகித்து வரும் நிலையில், இறந்தவர் யார் என்று அடையாளம் காண மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.