ஓடும் ரயிலில் நடந்த துயரம்.. கற்பைக் காப்பாற்ற இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு
ரயிலில் பயணித்த பெண் தனது கற்பைக் காப்பாற்ற ரயிலிலிருந்து கீழே குதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம மாவட்டத்தில் இருந்து குருவாயூர் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் ஒருவர் பயணித்துள்ளார்.
இதில் குறித்த பெண் தனியாக இருப்பதை அவதானித்த நபர் ஒருவர் பெண்ணை ரயில் கழிவறைக்குள் தள்ளி வன்கொடுமை செய்ய முயற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி அந்த பெண் அணிந்திருந்த தங்க நகைகளையும் பறிக்க முயற்சித்த நிலையில், குறித்த பெண் உடனடியாக ரயில் பெட்டியின் கதவைத் திறந்து ரயில் சென்று கொண்டிருக்கும் போது கீழே குதித்துள்ளார்.
இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த பெண்ணிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் தப்பாக நடக்க முயன்ற நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.