த்ரிஷா, அசின் மோதலா? பலரது கேள்விக்கு வெளியான பதில்
நடிகை த்ரிஷா, அசின் இடையே சண்டை என்று கிளம்பிய பேச்சுக்கு த்ரிஷா கொடுத்த பதில் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா, அசின்
நடிகை த்ரிஷா 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் நடித்து வரும் நிலையில், அசினும் இந்த காலக்கட்டத்தில் தான் சினிமாவிற்குள் நுழைந்தார்.
த்ரிஷா அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் நிலையில், அசின் இடையே பிரச்சனை என்ற தகவல் வைரலாகி வருகின்றது.
இவர்கள் இருவரும் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் அடுத்தடுத்து நடித்திருந்த நிலையில், நடிகை அசின் சினிமாவில் உச்சத்திலிருந்த போது திருமணம் செய்து செட்டில் ஆன நிலையில், த்ரிஷா சிங்கிளாக இருந்து வருகின்றார்.
விஜய்யுடன் த்ரிஷா திருப்பாச்சி படத்தில் நடித்திருந்தார். பின்பு சிவகாசி படத்தில் அசின் நடித்திருந்தார். இருவரும் விஜய்யுடன் அடுத்தடுத்து நடித்ததால் மோதல் ஏற்பட்டதாகவும், அதன் பின்பு அசின் பாலிவுட் பக்கம் சென்றதாக பேச்சு எழுந்தது.

த்ரிஷாவின் விளக்கம்
அசினுடன் மோதல் சர்ச்சை குறித்து த்ரிஷா பேட்டி ஒன்றில் கூறுகையில், இவை முற்றிலும் வதந்தி என்றும், அசின் மட்டுமின்றி எந்தவொரு நடிகையாக இருந்தாலும் யாருடனும் எனக்கு மோதல் கிடையாது.
நான் விருது வாங்கும் போது தான் முதன்முதறையாக அசினை நேரில் சந்தித்ததாகவும், அவர் தனக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார்.
ஆனால் மீடியாவில் இவ்வாறு பேச்சு வந்தது. தனிப்பட்ட முறையில் கூட அவரிடம் எனக்கு எந்தவொரு தொடர்பும் கிடையாது என்றும் அவர் ப்ரொபஷ்னலானவர் என்று கூறியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |