ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய நபர்: இறுதியாக கிடைத்த அதிரடி தண்டனை
பிரிட்டனில் ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய நபரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் அதிரடியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் டட்டஸ்டன் நகரைச் சேர்ந்தவர் ஆரோன் ஓ ஹல்லோரன். இவரது தனது மிட்சுபிஷி காரை டட்டஸ்டன் நகர ரயில் நிலையத்தின் உள் எடுத்து சென்றதோடு, அரை மைல் தூரம் தண்டவாளத்தில் காரை ஓட்டியதுடன், பின்பு காரை விட்டுவிட்டு எஸ்கெப் ஆகியுள்ளார்.
காரின் உள்ளே இருந்த அவரது செல்போனை வைத்து ஆரோனை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனையும், 156 பவுண்ட் தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் காரணமாக ரயில் சேவையில் 8 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதுடன், ரயில்வே நிர்வாகம் மற்றும் பயணிகளுக்கு 23 ஆயிரம் பவுண்ட் மதிப்பில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது மிகவும் ஆபத்தானது மற்றும் அர்த்தமற்ற செயல் என்று கருத்து தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரி ஒருவர், நல்ல வேளையாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் தனது முட்டாள்தனமான செயல்களை செய்வதற்கு ஆரோனுக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
Watch the shocking moment a driver sped down the railway tracks near Birmingham.
— British Transport Police (@BTP) September 7, 2021
He’ll now have plenty of time to reflect on this ‘immensely dangerous and senseless act’ in prison. ??
Full story here ? https://t.co/OYE29CNWN9 pic.twitter.com/5IQhVJR8JY