ஒரு ரயில் பயணத்திற்கு 19 லட்சம் செலவாகுமா? அப்படி என்ன ஸ்பெஷல்?
வாழ்க்கையில் நாம் அனைவரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய ரயில் என்று பயணித்திருப்போம, அந்த ரயில் பயணத்தின் அனுபவங்களை நீங்கள் மீட்டி பார்த்துக் கொள்ள முடியும்.
உங்களது பெற்றோர் பயணத்தின் நடுவில் சிற்றுண்டிகளை வாங்கிக் கொடுத்த தருணங்கள் நினைவில் பசுமையாய் இருக்கலாம்.
எனினும் நீங்கள் இந்தியாவில் ஆதி சொகுசான ரயில் ஒன்றில் பயணம் செய்திருக்கின்றீர்களா? மகாராஜா எக்ஸ்பிரஸ் என்ற ஆதி சொகுசு ஆடம்பர ரயில் சேவை பற்றிய தகவல்களை நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
19 லட்சத்திற்கு ரயில் பயணமா?
மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பயணிகளுக்கு வித்தியாசமான புது அனுபவத்தை வழங்குகின்றது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இந்தியாவின் மிக அழகான சுற்றுலா மையங்களை அதன் பெருமைகளையும் அறிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் முடிகின்றது.
இந்த ரயில் நான்கு வித்தியாசமான பாதைகள் வழியாக ஏழு நாட்கள் பயணம் செய்கின்றது. இந்தியன் பனோரமா, இந்தியன் ட்ரஸர், இந்தியன் ஸ்ப்ளெண்டர் மற்றும் ஹெரிடேஜ் ஆப் இந்தியா ஆகிய நான்கு வித்தியாசமான ரயில் பயண அனுபவங்கள் இந்த ரயில் சேவை ஊடாக கிடைக்கப் பெறுகின்றது.
இந்த ரயில் இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களில் அளவிற்கு நிகரானதாகும் இந்த ரயில் பெட்டி ஒன்று இரண்டு படுக்கை அறைகள், அட்டாச் பாத்ரூம், விருந்தினர்கள் உணவு உட்கொள்ள தேவையான டைனிங் அரை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டு அமைந்துள்ளது.
இந்த ரயில் பயணத்திற்கான மொத்த கட்டணம் 19 லட்சத்தை விடவும் அதிகமாகும். இந்த ரயில் சேவை குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான நெட்டிசன்கள் இந்த ரயில் கட்டணம் மிக அதிகமானது என்ற வகையில் தங்களது கமன்ட்களை வெளியிட்டுள்ளனர்.