பெண்ணை அசிங்கப்படுத்த நபர் செய்த வேலையால் காத்திருந்த விபரீதம்! வாயை பார்த்து அதிர்ந்து போன மருத்துவர் : ஷாக்கிங் வீடியோ
பெண் ஒருவரின் செயலை பொய் என நிரூபிக்க கொரில்லா க்ளூ ஸ்பிரேவை வாயில் ஒட்டிய நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வு அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் லுசியானா பகுதியை சேர்ந்தவர் டெசிகா பிரவுன். இவர் இன்ஸ்டாகிராம் வெளியிட்ட காணொளி ஒன்று இணையத்தில் தீயாய் பரவியது.
அந்த வீடியோவில், தலைமுடியை பராமரிக்க வழக்கமாக உபயோகிக்கும் ஹேர் ஸ்ப்ரேவுக்கு பதிலாக கொரில்லா க்ளூ ஸ்ப்ரேயை பயன்படுத்தியாக கூறுகின்றார். பின்னர் அதனால் தலைமுடிக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் தெரிவித்திருந்தார்.
அவரது வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், கொரில்லா க்ளூ நிறுவனம் அவரின் நிலையை அறிந்து மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டது.
இதனையடுத்து, லெனின் மார்டின் என்ற அமெரிக்கர் அந்த பெண்ணின் செயல் பொய்யானது என்றும், சமூகவலைதளங்களில் புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதனை அவர் செய்ததாகவும் கூறியிருந்தார். மேலும், கொரில்லா ஸ்பிரேவை தானும் பயன்படுத்தி அந்த பெண் செய்தது பொய் என நிரூபிக்க உள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
கொரில்லா ஸ்பிரேவை எடுத்த அவர், வாய் பகுதியில் பேப்பர் கப் ஒன்றை பயன்படுத்தி ஒட்டிக்கொண்டார். எளிதில் அந்த கப்பை எடுத்துவிடலாம் என நினைத்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மருத்துவர்களின் உதவியுடன் அது நீக்கப்பட்டது.
இறுதியில் அவரின் தவறை அவரே உணர்ந்து கொண்டுள்ளார்.