Reecha Special: இலங்கையில் மரவள்ளிக் கீரை உற்பத்தியாளர்களுக்கு இன்று முதல் ஒரு அரிய வாய்ப்பு
இலங்கையில் மரவள்ளிக் கீரை உற்பத்தியாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை றீச்ஷா பண்ணை உரிமையாளர் - பாஸ்கரன் கந்தையா அவர்கள் வழங்கியுள்ளார்.
ஏற்றுமதி
இலங்கையில் பல்வேறுப்பட்ட சிறப்புக்கள் உள்ளன. இங்கு விளையும் பொருட்கள் உலகளாவிய ரீதியில் இன்றும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இலங்கையில் விளையும் மரவள்ளிக் கிழங்கும், அது சார் உணவு பொருட்களும் வெளிநாடுகளில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
அதிக சத்துக்களை கொண்ட மரவள்ளிக் கிழங்கு, பலரை பட்டினியோடு வாழ விடாமல் உயிர்காத்த உணவாக உள்ளது.
இவ்வாறான நிலையில், மரவள்ளிக் கீரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில், றீச்ஷா நிறுவனம் கவனம் செலுத்தி வருகின்றது.
குறிப்பாக தாயகத்தில் விளைவிக்கப்படும் மரவள்ளிக் கீரையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நீங்கள் றீச்ஷாவிடம் கையளிக்க முடியும். இதற்கான பணமும் அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பொதிகளை நீங்கள் றீச்ஷா பண்ணை, ஐபிசி தமிழின் யாழ். கலையகம் உள்ளடங்களான மூன்று இடங்களில் கையளிக்க முடியும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |