இலங்கை ஆதி மக்களின் வாழ்வாதாரத்தை கண்முன் காட்டிய அருங்காட்சியம்
பொதுவாகவே இன்றைய 21ஆம் நூற்றாண்டில் நவீன காலம், தொழிநுட்ப காலம் என்று தான் இந்தக் கால தலைமுறையினருக்கு தெரியும்.
ஆனால் நமது காலத்தை கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் தான் எம் நூற்றாண்டிற்குப் முன் வாழ்ந்த மக்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெரியும்.
வெறுமனே ரிவிக்குள்ளும் ஸ்மார்ட் போனுக்குள்ளும் மூழ்கிப் போன இந்த தலைமுறையினர் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய பல தகவல்களை ஆதிகாலத்து மக்கள் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
இவர்கள் மிச்சம் வைத்துவிட்டுப் போனதை பத்திரப்படுத்தி பாதுகாப்பாக வைத்திருக்கும் இந்த ஒரு இடம் தான் கொழும்பில் Traditional Puppet Art Museum என்ற அருங்காட்சியம்.
இந்த அருங்காட்சியத்தில் சிங்கள மக்களின் கலாச்சாரம், வழிபாட்டு முறை, அவர்கள் ஆட்சி செய்த விதம், போன்ற பல தகவல்களை உங்கள் கண்முன் காட்டும் விதத்தில் அத்தனையையும் அமைத்து நேர்த்தியாக பராமரித்து வருகிறார்.
இதில் மட்டும் இல்லாமல் இன்னும் பல தகவல்களை விரிவாக உள்ளடங்கி வந்துள்ளது எமது பயணம் நிகழ்ச்சியில்,