Kathirikai Kulambu: பாரம்பரிய முறையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
கத்திரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை கரைப்பதில் இது பெரும்பங்கு வகிக்கின்றது.
உங்கள் கால்களில் வீக்கம் இருந்தால் கத்திரிக்காய் அரைத்து, வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் குறையும்.
இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துவதால் , உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினசரி உணவில் கத்தரிக்காயை சேர்த்துக்கொள்வது சிறப்பு.
கதத்திரிக்காய் சாப்பிடுவதால், இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு ஆகியன தடுக்குகிறது.
கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவைத் தடுக்கிறது. இதனால் மூளைக்கு வலிமையை அதிகரிப்பதோடு ஞாபக சக்தியையும் தூண்டுகிறது.
கத்திரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கத்தரிக்காயில் எவ்வாறு பாரம்பரிய முறையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய்- 1/4கிலோ
சின்ன வெங்காயம்- 15
தக்காளி- 1
வறுத்து அரைக்க
மல்லி விதை -1மேசைக்கரண்டி
சீரகம் -1 தே.கரண்டி
மிளகு -1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு -1/2 தே.கரண்டி
கடலைப்பருப்பு -1/2 தே.கரண்டி
மிளகாய் - 3காஷ்மீரி
வரமிளகாய் -3
தேங்காய் துருவல் -7 மேசைக்கரண்டி
புளி - சிறிதளவு
தாளிக்க தேவையானவை
நல்லெண்ணெய் -5 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
வெந்தயம் -1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை -சிறிதளவு
செய்முறை
முதலில் வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து ,வறுக்க கொடுக்கப்பட்ட பொருட்களை சேர்த்து,அதனுடன் புளியையும் உதிர்த்துவிட்டு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து தேங்காய் சேர்த்து ஈரப்பதம் போகம் வலையில் நன்கு வறுத்து,ஆறவிட வேண்டும்.
பின்னர் கத்தரிக்காயை துண்டுகளாக வெட்டி உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
லேசாக வதங்கியதும்,தக்காளி சேர்த்து வதக்கி, பின்னர் கத்தரிக்காய் சேர்த்து 10 நிமிடங்கள் மூடி போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் கத்தரிக்காயுடன் சேர்ந்து வெங்காயம்,தக்காளியும் நன்கு வதக்கி, கத்தரிக்காய் வதங்கி கலர் மாறியதும்,அரைத்த விழுதையும் அதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கினால் அவ்வளவு தான், சுவையான,செட்டிநாடு கத்தரிக்காய் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
