ரோபோ ஷங்கரின் மரணத்திற்கு காரணம் இதுவா? வைத்தியம் பார்த்த பாரம்பரிய மருத்துவர் கூறிய தகவல்
நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் மரணத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து, அவருக்கு வைத்தியம் பார்த்த பாரம்பரிய மருத்துவர் பேசியுள்ளார்.
ரோபோ ஷங்கர்
சமீபத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது ஆயுர்வேத மருத்துவத்தின் மீது சில விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ரோபோ ஷங்கருக்கு மஞ்சள் காமாலைக்காக நாட்டு வைத்தியம் பார்த்த மருத்துவரே ஊடகங்களில், அவரது இறப்பிற்கான சில காரணங்களை கூறியுள்ளார்.
அவர், ரோபோ ஷங்கர் தன்னைத் தேடி வந்தபோது மிக மோசமான நிலையில்தான் வந்தார். பரிசோதனைகள் செய்து மூலிகை வைத்தியங்கள் செய்தோம்.
குணமடைந்து வந்த அவர், அந்த மருந்துகளால் 100 சதவீதம் மஞ்சள் காமாலையில் இருந்து மீண்டு வந்தார். தொடர்ந்து பார்க்க வந்தபோது சொன்னபடியே உடல் எடை எல்லாம் குறைந்து இருந்தார்.
டெஸ்ட் எடுத்து பார்த்ததில் ரிப்போர்ட்டும் நன்றாகவே இருந்தது.
முழுமையாக குணமடைந்த பின் அவ்வப்போது நான் தொலைபேசியில் நலம் விசாரித்துக் கொண்டுதான் இருந்தேன். நன்றாகதான் இருந்தார். ஒருமுறை வந்து பார்த்துவிட்டு செல்லுங்கள் என்று கூறினேன், ஆனால் வரவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும், ரோபோ ஷங்கர் சிகிச்சைக்குப் பிறகும் படப்பிடிப்பு வேளையில் உணவு சரியாக எடுத்துக் கொள்வதில்லையாம். எப்போதும் தண்ணீர் குளிர்ச்சியாக குடிப்பாராம். அதிகமாக ஐஸ் வாட்டர் குடித்ததுதான் இந்த இறப்பிற்கு காரணம் என்றும், ஏற்கனவே சில்வர் சாயங்கள் பூசி நடித்ததில் ஏற்பட்ட ரசாயன தாக்குதல் உள்ளிட்டவையும் இதை மீண்டும் தூண்டிவிட்டு இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
முன்னதாக, கல்லீரல் பாதிப்பில் இருந்து மீண்டுவந்த ரோபோ ஷங்கருக்கு சிறுவயதிலேயே ஒருமுறை மஞ்சள் காமாலை வந்திருந்ததாக உடன்பிறந்த சகோதரரே சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.