குழந்தைகளுக்கு பொம்மை வாங்கப்போகிறீர்களா? இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கே
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட வாங்கிக்கொடுக்கும் பொம்மைகள் பாதுகாப்பு தானா என்பதையும், எம்மாதிரியான விளையாட்டு பொம்மைகளை தவிர்ப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் பொம்மைகளில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிளை தெளிவாக படித்த பின்னரே வாங்க வேண்டும். மேலும் குறித்த பொம்மையை எவ்வாறு கையாள்வது என்பதையும் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப பொம்மைகளை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
சிறிய பொம்மைகளை வாங்கிக் கொடுக்காமல், குழந்தைகளின் வாயை விட, குறைந்தது 3 சென்டிமீட்டர் விட்டம் மற்றும் 6 சென்டிமீட்டர் நீளம் இருப்பது போன்று பாகங்கள் கொண்ட பொம்மைகளையே வாங்க வேண்டும்.
பொம்மையின் பாகங்கள் தரமானதாகவும், உறுதியாகவும் இருக்கின்றதா என்பதை சோதித்து வாங்க வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பொம்மைகளை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
சிறிய வயதில் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகமாக இருக்கும் என்பதால், கற்றல் திறனை வளர்க்கும் விளையாட்டு பொம்மைகளை வாங்கி கொடுக்கலாம்.
சிறிய பேட்டரி மற்றும் காந்தம் போன்ற பாகங்கள் கொண்ட பொம்மைகளை வைத்து விளையாடும் போது, வலுவாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்து வாங்க வேண்டும்.
பொம்மைகள் வாங்கும் போது தவிர்க்க வேண்டியவை:
பொம்மைகளில் தீட்டப்பட்ட வண்ணங்கள், குழந்தைகள் வாயில் எளிதாக கரையக்கூடும். அத்தகைய பொம்மைகளைத் தவிர்க்க வேண்டும்.
மெல்லிய பிளாஸ்டிக் பொம்மைகள் வாங்கினால் அது எளிதில் உடைந்து, கூர்மையான பகுதிகளாக மாறி குழந்தைகளுக்கு காயம் ஏற்படுத்தும். பெரும்பாலும் பிளாஸ்டிக் பொம்மைகளைத் தவிர்ப்பது நல்லது.
அதீத சத்தம் வெளிப்படுத்தும் பொம்மைகள் குழந்தைகளுக்கு பய உணர்வை தரும். எனவே அவற்றை தவிர்க்க வேண்டும்.
மின்சாரத்தால் இயங்கும் பொம்மைகளைத் தவிர்க்கவும்.