மனதை மயக்கும் குளு குளு மணாலி! இந்த மாதத்தில+ தான் சுற்றி பார்க்கணுமாம்;
பனிப்பொழிவு காலக்கட்டத்தில் பலரும் சுற்றுலா செல்ல விரும்புவார்கள். பல ஊர்கள் சென்றாலும், பலருக்கும் பிடித்த இடமான மணாலி உள்ளது. பனிப்பொழிவின் தீவிரம் அதிகரித்து வருவதற்கு மத்தியிலும் பனிப்பொழிவை ரசிக்க சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் அங்கு படையெடுத்து வருகின்றனர்.
மனம் மயக்கும் இயற்கை அழகு, வண்ணமயமான மலர்த்தோட்டங்கள், பனிமூடிய மலைச்சிகரங்கள் மற்றும் ஆப்பிள் தோட்டங்கள் என உன்னதமான அழகம்சங்களின் மூலம் மணாலி காலங்காலமாக சுற்றுலாப்பயணிகளை வசீகரித்து வருகிறது.
இதுமட்டுமின்றி, பனி மூடிய மலைகளுக்கு நடுவே பசுமைப் போர்த்திய மலைகளையும், தூய்மையான காற்றையும் விரும்புகிறவர்களுக்கு மணாலி சிறந்த தேர்வாக இருக்கும். இங்கு, சோலங் பள்ளத்தாக்கில் சாகச விளையாட்டுகள், மணாலி பறவைகள் சரணாலயம், பழமையான கோவில்கள் என, இங்கு பார்க்க ஏராளமான இடங்கள் உண்டு.
டிரெக்கிங், கேம்பிங், ஆங்கிலிங், ரிவர் ராப்டிங், ஸ்கீயிங், போன்ற சாகச விளையாட்டுகள் சிறப்பாக இருக்குமாம். மேலும், மணாலியை முழுமையாக சுற்றிப்பார்க்க 4 முதல் 5 நாட்கள் தேவைப்படும்.
இங்கு வருடம் முழுதுமே இதமான இனிமையான பருவநிலை நிலவினாலும், அக்டோபர் முதல் ஜூன் மாதங்கள் இங்கு செல்ல ஏற்ற காலநிலையாகும். இந்த சமயங்களில் தான் 10 முதல் 25 டிகிரி வரை வெப்பநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் ரசிப்பதற்கு ஏற்ற காலமாக இது விளங்குகிறது.
அதே நேரம் ஜனவரி முதல் ஏப்ரல் மாதங்களில் இங்கு நிலவும் அதிகமான பனிப்பொழிவினால், சாலைகள் மூடப்பட்டு பயணம் செய்ய முடியாத நிலை உருவாகும்.
அதனால் இந்த மாதங்களை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து, மணாலியில் செப்டம்பர் மாதத்தில் மழை குறையத்தொடங்கி, அக்டோபர் மாதம் முதல் பனிக்காலம் ஆரம்பிக்கிறது.
இதனால் அந்தசமயங்களில் இயல்பு வெப்பநிலை -1 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கீழே சென்றுவிடும். எனவே டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் மணாலிக்கு செல்லும் பட்சத்தில் அதன் இயற்கை அழகையும், பனிப்பொழிவையும் கண்டு அனுபவிக்கலாம்.
மணாலியில் மார்ச் மாதம் கோடைக்காலம் ஆரம்பித்தாலும் அங்கு இயல்பு வெப்பநிலையானது 10 முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவிலேயே இருக்கிறது. இந்த சமயத்தில் மணாலியின் சிறப்புமிக்க பருவமலர்கள் பூத்துக்குலுங்குவதால் இதை ரசிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் கோடைக் காலத்தில் பயணம் செய்கின்றனர்.
அங்கு, வெப்பநிலை மிக மிக குறைந்து மைனஸ் 2 புள்ளி 1 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி உள்ளது. கின்னார் மாவட்டத்தில் உள்ள ஆப்பிள் தோட்டங்களுக்கு பெயர்பெற்ற கப்லா பகுதியில் மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி உள்ளது.
Manali-யில் வெப்பநிலை மைனஸ் 4 புள்ளி 4 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.
இதனிடையே பிரபல சுற்றுலாத்தலமான kufri-யில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 60 சென்டி மீட்டர் அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.