தாஜ்மஹாலை எப்படியெல்லாம் சுற்றிபார்க்கவேண்டும் தெரியுமா? இதை மட்டும் மிஸ்பண்ணிடாதீங்க!
உலக அதிசயங்களில் ஒன்றாக பெருமைபெற்றது தாஜ்மஹால். இந்தியாவில் கட்டப்பட்டுள்ள தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை இந்தியர்களுக்கு மட்டுமில்லை வெளிநாட்டவர்களுக்கும் இருக்கும்.
காதல் மனைவி மும்தாஜிற்காக ஷாஜகான் பார்த்து பார்த்து கட்டியது. இதன் வரலாற்றை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில், தாஜ்மஹாலை பார்க்க சென்றால் எப்படி பார்க்க வேண்டும் என்பதை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
தாஜ்மஹாலை முழுக்க முழுக்க பளிங்கு கற்களால் கட்டப்பட்ட ஒரு கட்டிடம். இந்த இடம் உலகம் முழுக்க தெரிந்த ஒரு சுற்றுலாத் தளமாகவே உள்ளது. இந்தியாவில் டெல்லிக்கு சென்றால், நீங்கள் கட்டாயம் தாஜ் மஹாலுக்கு சென்று வரவேண்டும்.
ஆக்ராவில் அமைந்துள்ள இந்த தாஜ் மஹால், கிட்ட செல்லும் வழியில் ஒரு கிலோ மீட்டர் முன்பாகவே நம்முடைய வாகனங்களை நிறுத்திவிடுவார்கள். தாஜ் மஹால் இருக்கும் பகுதிக்கு அருகில் எந்தவிதமான எரிபொருள் வாகனங்களையும் நிறுத்த அனுமதியில்லையாம்.
ஏனென்றால், பளிங்கு கற்களின் நிறம் மஞ்சளாக மாறி வருவதால் இந்த நடவடிக்கையை உ.பி மாநில அரசு கடுமையாக பின்பற்றி வருகிறது. மேலும், அங்கு சென்றபின் பேட்டரி வாகனங்கள் அல்லது குதிரை வண்டியில் சென்று தான் தாஜ்மஹாலுக்கு வந்து இறங்க முடியுமாம்.
எந்தவழியில் செல்கிறோம் என்பதை சரிபார்த்துவிட்டு, மீண்டும் அதே பாதையில் திரும்பி வந்துவிடுவது நல்லது. பின், தாஜ் மஹால் இருக்கும் இடத்திற்குள் பிரவேசித்த பிறகு, அந்த பளிங்கு கட்டிடத்தை முதன்முறையாக நீங்கள் பார்த்தால் சொக்கிப்போவீர்கள் என்பது மட்டும் உறுதி.
அப்போது நம் மனம் கவர்ந்தவர் அருகில் இருந்தால், ஒருவேளை காதலின் உன்னதத்தை நீங்கள் கண்டறிய முடியுமாம். அந்த அளவிற்கு அந்த இடத்தின் அழகு கண்களால் கவரப்படுமாம்.
இதனைத்தொடர்ந்து, தாஜ் மஹாலை சுற்றி நான்கு தூண்கள் கட்டப்பட்டுள்ளன. ஒருவேளை அந்த தூண்கள் இடிந்து விழுந்துவிட்டால், தாஜ் மஹால் கட்டிடத்தின் மீது விழாதுவாறு கட்டப்பட்டுள்ளன.
இந்த கட்டிடத்தின் பின்னால் யமுனை ஆறு பாய்ந்து ஓடுகிறது. அதில் தண்ணீர் இருந்தால் நீங்கள் படகு சவாரியும் செய்யமுடியுமாம். முக்கியமாக இந்த இடத்திற்கு செல்லும் காதலர்கள் தாஜ்மஹாலுக்கு முன் அமர்ந்திருக்கும் பெஞ்சு மீது உட்கார்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது அதன் தனி அழகை காட்டுகிறதாம்.
ஒரு நாளைக்கு மட்டுமே இங்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அதிலும், விடுமுறை நாட்களின் போது சுமார் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருவதாக கூறப்படுகின்றன.
அப்படி பார்த்தால், ஒரு மாதத்தின் முடிவில் உலகெங்கிலும் இருந்து சுமார் 75 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தாஜ் மஹாலை பார்க்க வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தாஜ்மஹாலை எப்போதுமே காலை முதல் மாலை வரை மட்டுமே தான் சுற்றிபார்க்கமுடியுமாம். அதைவிட்டால், பௌர்ணமி நாட்களில் மட்டும், இரவில் உள்ளே சென்று தாஜ் மஹாலை பார்ப்பதற்கு அனுமதியுண்டு. அதுவும் மாவட்ட நிர்வாகம் மனது வைத்தால் மட்டுமே நடக்கும்.
தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க கட்டணமும் வசூலிக்கப்படுகிறது,. அங்கு இன்னும் சில இடங்களை சுற்றிப்பார்க்கவும் சிறப்பாக இருக்குமாம். இங்கு, அக்பர் கல்லறை, ஆக்ரோ கோட்டை, தாஜ் அருங்காட்சியகம் போன்றவை முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்கள்.
தாஜ் மஹாலை சுற்றியுள்ள சந்தைகளில் அனைத்து வித பொருட்களும் கிடைக்கும். அதனால் சந்தைப் பகுதிகளில் மக்கள் கூட்டம் கலைக்கட்டுமாம்.,. அப்புறம் என்னாங்க உங்க காதலியை கூட்டிட்டு செல்ல ரெடியா..