சுற்றுலாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய மாலை தீவின் சுற்றுலா தலங்கள்...
மாலைதீவு சினிமா பிரபலங்கள் முதல் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், வசதி படைத்தவர்கள் என பலரின் பொழுதுபோக்குத் தலங்களாக காணப்படுகிறது.
மாலை தீவு
இந்த இடம் ழுழுமையாக சுற்றுலா தலமாகவே காணப்படுகின்றது. இது அழகில் சொர்க்கமான நாடாகும்.
இங்கு அழகான கடல், மனதை கவரும் இயற்கைக் காட்சிகள், ஆழ்கடல் நீச்சல், கடலுக்கு அடியில் உணவு என வித்தியாசத்தை தேடி வருபவரின் மனங்களை சந்தோஷப்படுத்தும் விதமாக இங்கு அனைத்தும் காணப்படுகிறது.
இங்கு மாலத்தீவின் தலைநகரமாக மாலே ஐலேண்ட் விளங்குகிறது. இங்குதான் நாட்டின் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.
மாலே நகரில், சுவையான உணவுகள் கிடைக்கும் பலவிதம இதை தவிர அழகில் பெயர் பெற்ற இடம் என்று சொல்லக்கூடிய கொமோ கோகா தீவு இதில் அற்புதமான ரிசார்ட்டுகள் மற்றும் அழகான ரம்மியமான வாட்டர் வில்லாக்கள் இங்கு உள்ளன.
மாலைத்தீவில் உள்ள மிகவும் பிரபலமான தீவுகளில் ஒன்றாக பரோஸ் தீவு விளங்குகிறது. மெல்லிய மணல் மற்றும் சிறிய ஓடுகள் மற்றும் கற்களைக் கொண்டு செல்லும் மென்மையான அலைகள் நிறைந்த கடற்கரைகள் இங்கு உள்ளன.
அத்துடன், பவளப்பாறைகளுக்கும், நீர் விளையாட்டுக்களுக்கும் பரோஸ் தீவு புகழ்பெற்றது. இங்கு நீங்கள் உங்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்த முடியும்.