குறைந்த செலவில் சுற்றுலா போகணுமா? அப்போ இந்த நாடுகளை மிஸ் பண்ணிறாதீங்க
பொதுவாக விடுமுறைகள் கிடைக்கும் போது வெளி நாடுகளை சுற்றி பார்க்க செல்ல வேண்டும் என நினைப்போம்.
ஆனால் பட்ஜெட் பிரச்சினை, பணம் குறைவாக இருக்கின்றது என கவலையாக இருப்பீர்கள்.
நான் கூற போகும் நாடுகளுக்கு சென்றால் இந்தியா பணம் அவ்வளவாக செலவாகாது. உங்கள் பட்ஜெட்க்குள் குழந்தை மனைவியுடன் ஜொலி செய்யலாம்.
அப்படி என்ன என்ன நாடுகள் இருக்கின்றது? என்று தானே யோசிக்கிறீங்களா? இது தொடர்பான பூரண விளக்கத்தை தொடர்ந்து பார்க்கலாம்.
1. இலங்கை
இயற்கை கொடை நிறைந்த நாடாகவும் இந்தியாவிற்கு மிக அருகாமையில் இருக்கும் தீவாக இந்த நாடு இருக்கின்றது.
இந்த தீவு ஒரு சொர்க்க பூமி என பலரும் கூறுவார்கள். இயற்கை எழில், கலாச்சாரம், என பாரம்பரியத்திற்கு பெயர் போன நாடாக இருக்கின்றது.
இங்கு காலி கடற்கரை, கண்டி மலைப்பகுதி, அனுராதபுர பொலநறுவை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் பெளத்த விகாரகைகள் முக்கிய சுற்றுலா தலங்களாக உள்ளன. அத்துடன், இலங்கை கலாச்சாரம் படி சமைக்கப்படும் சாப்பாடுகளை சுவைக்கலாம்.
துறைமுகம், புவியியல் அமைவிடம், காலநிலை, புனித மேரி தேவாலயம், ஏராளமான வண்ணமயமான பூங்காக்கள் போன்றவை மிக அழகாக, பார்ப்பவரைக் கவரும் வண்ணம் உள்ளன.
2. மாலத்தீவு
இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மிகச் சின்னதாக இருக்கும். இந்த தீவு முழுவதும் கடற்கரைகளாக தான் இருக்கும். இதனால் தான் தென்னிந்திய பிரபலங்கள் இங்கு அடிக்கடி செல்கிறார்.
நம்முடைய பட்ஜெட்டிற்கு உணவு, தங்குமிடம் என அணைத்தையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மாலைத்தீவில் அழகழகான கடற்கரைகள், நெஞ்சம் அள்ளும் இயற்கை காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் வண்ணம் அமைந்துள்ளன.
உணவுகள் என பார்க்கும் போது இந்திய பெறுமதிக்கு ஒரு நாளைக்கு 80 ரூ முதல் 100 ரூ வரை குறைந்த விலையில் உணவுகள் கிடைக்கின்றன.
3. நேபாளம்
நீங்கள் ஒரு இயற்கை ரசிகர் என்றால் இந்த நாடு சரியாக இருக்கும். இயற்கைக்கும் கலாச்சாரத்திற்கும் பெயர் போன நாடாக இருக்கின்றது.
அத்துடன் சுற்றுலா செல்லும் போது மிக குறைந்த செலவில் 10 நாட்கள் ஜொலி செய்து விட்டு வரலாம். அழகிய பச்சை மலை தொடர்களை கண்டு ரசிக்கலாம்.
4. வியட்நாம்
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வியட்நாம் ஒன்றாகும். இங்கு நவீன வரலாறு, அழகான கடற்கரைகள், அழகிய நிலப்பரப்புகள், அற்புதமான உணவு மற்றும் படகு சவாரி ஆகியவற்றை பார்க்கலாம்.
இந்த நாட்டிற்கு செல்லும் பயணிகள் மலை நகரமான “Sape” என்ற இடத்திற்கு செல்லாமல் வரமாட்டார்கள். ஏனெனின் அந்த மலைசூழ் பிரதேசத்தில் ஏராளமான பழங்குடியினர் இருக்கிறார்கள்.
5. மியான்மர்
இந்தியாவிலிருந்து செல்லும் பயணிகள் அதிகமாக இந்த நாட்டை விரும்புவார்கள். ஏனெனின் இங்கு பிரபலமான சுற்றுலா தலங்களில் யாங்கோன் மற்றும் மாண்டலே போன்ற பெரிய நகரங்கள் உள்ளன.
அது மட்டுமல்லாமல் கலாச்சாரங்கள், இரவு சந்தைகள், பாரம்பரிய சுற்றுலா, ஏராளமான கடற்கரைகள், ஆன்மீக சுற்றுலா ஆகிய தேவைகளுக்காக தான் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |