கோடிக்கணக்கில் செலவு செய்தாலும் இந்தியாவில் பார்க்க முடியாத இடங்கள்.. முழுவிவரம் இதோ!
இந்தியாவில் பல்வேறு மொழிகள், உணவுகள், உடைகள், மதங்கள் மற்றும் பன்முகக் கலாசாரங்களை உள்ளடக்கிய மக்கள் வாழ்கிறார்கள்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான பல இடயங்களில் வியக்க வைக்கும் இயற்கை வளங்கள் காணப்படுகின்றன.
பழம்பெருமை கொண்ட நாடான இந்தியாவில் சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் கொட்டிக் கிடந்தாலும், இந்தியாவில் பார்வையாளர்களுக்குத் தடை செய்யப்பட்ட சில இடங்கள் உள்ளன.
அப்படியாயின் பார்வையாளர்களுக்குத் தடை செய்யப்பட்ட 3 இடங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் பார்க்க முடியாத இடங்கள்
1. பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC)
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள நாட்டின் பிரதமரால் நேரடியாகக் கண்காணிக்கப்படும் முதன்மையான அணு ஆராய்ச்சி நிலையமான பாபா அணு ஆராய்ச்சி மையத்தை யாராலும் பார்க்க முடியாது. மாறாக இது பல்வேறு அணு ஆலைகள் அமைக்கப்பட்டு ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இங்கு அணுக்கரு எரிபொருள் சுழற்சி, எதிர்காலத்துக்குத் தேவையான நவீன அணுக்கரு ஆற்றல் அமைப்புகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்னாற்றல், அதிநவீன தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்படும் இடம் என்பதால் வெளியில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமே உள்ளே செல்லலாம்.
2. வடக்கு சென்டினல் தீவு (North Sentinel Island)
இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபர் தீவுகளில் 60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வடக்கு சென்டினல் தீவு உள்ளது.
இந்த தீவு, சென்டினலீஸின் என அழைக்கப்படுகிறது. அங்கு வாழும் உள்ளூர் பழங்குடியின மக்கள் டிவி, செல்போன், மின்சாரம் என வெளியுலகத் தொடர்புகள் சுத்தமாக இல்லாமல் தனித்தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இங்குள்ள பழங்குடியின மக்களைப் பாதுகாக்கவும், வெளியுலகில் இருந்து அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுக்கவும் வடக்கு சென்டினல் தீவுக்குச் செல்ல இந்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த சட்டத்தை மீறி உள்ளே செல்லும் பயணிகளுக்கு சென்டினல் மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
3. பாங்கோங் சோ ஏரி (Pangong Tso)
ஜம்மு, காஷ்மீர், லே, லடாக் ஆகிய பகுதியில் இருந்து சீன எல்லை வரை மிகப்பெரும் பரப்பளவில் பாங்கோங் சோ ஏரி அமைந்துள்ளது.
இமய மலையின் பின்னணியில் ஜில்லென்ற பகுதியில் இந்த ஏரியை பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். இந்த ஏரியின் சில பகுதிகள் சீன எல்லைக்கு மிக அருகில் இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |