முட்டைகளை பாதுகாக்க அரங்கேறிய பாசப்போராட்டம்: நடுங்க வைக்கும் மலைப்பாம்பின் கோப காட்சி
தனது முட்டையை பாதுகாப்பதற்கு உரிமையாளரை கடும் கோபத்தில் தாக்க முயன்ற பகீர் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்பதை மிகவும் அழகாக உணர்த்தி வருகின்றது இக்காட்சி.
jayprehistoricpets என்ற இன்ஸ்டாகிராமில் இந்த பாம்பின் பாச போராட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. மேலும் காணொளியுடன், அம்மா தனது முட்டைகளை பாதுகாக்க முடியும்' என எழுதப்பட்டுள்ளது.
பெண் மலைப்பாம்பு தனது முட்டைகளை (Python Eggs) பாதுகாக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் விரும்பப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.