திடீரென்று உயர்ந்த காமெடி நடிகர் சூரியின் சொத்து மதிப்பு - இத்தனை கோடியா?
நடிகர் சூரியின் சொத்து குறித்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது படு பிசியாக இருக்கும் காமெடி நடிகர்களில் நடிகர் சூரியும் ஒருவர்.
பல உணவகங்கள், பல படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தங்கள் என நடிகர் சூரியின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.
அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு சுமார் ரூ. 40 கோடி மதிப்பிலான சொத்து இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகின்றது.
ஹீரோவான சூரி
காமெடி நடிகரான சூரி, வெற்றிமாரன் இயக்கத்தில் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.
‘விடுதலை’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக சூரி தன் தோற்றத்தையே மாற்றியுள்ளார் என்றே கூறலாம்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழு மூச்சுடன் நடந்து வருகிறது. ஹீரோவாக சூரியை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
இன்னும் சில முக்கிய இயக்குனர்களின் படங்களிலும் அவர் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.