மொபைல் பேட்டரிகள் திடீரென்று வெடித்து சிதற என்ன காரணம்?... எச்சரிக்கை மக்களே
மொபைல்களின் பேட்டரி திடீரென வெடிப்பதால் சில அசம்பாவித நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
சில வேளைகளில் உயிரையும் இழக்க நேரிட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி வெடித்து தீப்பிடிப்பதற்கான சில பொதுவான காரணங்களை பார்க்கலாம்.
சனி பெயர்ச்சி 2022 : ஏழரை சனியால் ஏழரை வருடம் சிக்கி சின்னாபின்னமாகும் ராசிகள்.... யாருக்கு ஆபத்து!
கடுமையான வெப்பநிலையில் பேட்டரிகளை வைத்திருப்பது
ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகளை கடுமையான வெப்பநிலையில் வைத்திருக்கு போது பேட்டரிக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
நேரடி சூரிய ஒளி அல்லது மூடிய காரில் நீண்ட நேரம் இருந்தால் ஸ்மார்ட்போன் நன்றாக ஹீட்டாகி விடும்.
இட்லி பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த உணவகம்....பேரதிர்ச்சியில் தமிழர்கள்!
அதிக வெப்பம் காரணமாக பேட்டரியில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆக்ஸிஜன் போன்ற வாயுக்கள் உருவாகிறது. இவை ஸ்மார்ட்போன் வெடித்து தீப்பிடிக்க காரணமாக இருக்கலாம்.
அதிக நேரம் சார்ஜ் செய்வது
பல ஸ்மார்ட்போன் யூஸர்கள் தங்கள் மொபைல்களை அதிக நேரம் சார்ஜில் மறந்து வைத்து விடுவார்கள். இது பேட்டரி அதிகம் ஹிட்டாக வழிவகுக்கும்.
சில சமயங்களில் ஷார்ட் சர்க்யூட் காரணமாக வெடிப்பும் ஏற்படலாம்.
பல்வேறு கேபிள்களை பயன்படுத்துவது
பல்வேறு கேபிள்களை பயன்படுத்தி சார்ஜ் செய்வதால் வெடிப்பு சம்பவம் நிகழ வாய்ப்பு உள்ளது.
வேறு எந்த லோக்கல் அல்லது பிராண்டின் சார்ஜரை பயன்படுத்தினாலும் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி பாதிக்கப்படலாம்.
வெளிநாட்டில் நடிகை ராதிகா வாங்கிய விருது! இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசியது என்ன?
தேர்ட்-பார்ட்டி சார்ஜிங் கேபிள்கள் மற்றும் அடாப்டர்கள் உங்கள் டிவைஸை ஹீட்டாக்குவதோடு, பேட்டரியில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட வழிவகுக்கும்.
உடைந்த ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன் மோசமாக உடைந்திருந்தால் கூட வெடிக்க அல்லது தீப்பிடிக்க வாய்ப்புகள் அதிகம்.
மொபைலின் மேல் ஆகும் சேதம் பேட்டரியின் மெக்கானிக்கல் அல்லது கெமிக்கல் கூறுகளை பாதிக்கலாம். இதனால் ஏற்படும் ஷார்ட் சர்க்யூட் மற்றும் ஓவர் ஹீட் போன்ற நிகழ்வுகள் மொபைல் வெடிக்க அல்லது தீப்பிடிக்க காரணமாகலாம்.