மலிவான விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த பைக்.. சிறப்பு என்ன?
இன்றைய நவீன காலக்கட்டத்தில் பெட்ரோல் உயர்வால், இருசக்கர வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்கள் மிக குறைந்துவிட்டனர். அதற்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் எலக்ட்ரிக் வாகனத்தில் சில குறைபாடுகள் இருப்பதால், பெட்ரோல் வாகனத்தின் மைலேஜ் பைக்கிற்கு மவுசு அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் ஸ்டைலிஷான மைலேஜ் தரும் பைக்குகள் பற்றி நாம் இங்கு தெரிந்துகொள்வோம்.
Hero HF 100
ஹூரோ ஹெச் எஃப் 100 பைக்கானது மிகவும் மலிவான விலையுடைய வாகனம் ஆகும். இந்த வாகனத்தின் மைலேஜிற்காக அனைவரும் வாங்க ஆசைப்படுகின்றனர்.
பைக்கில் 8.36 பிஎஸ் பவரையும், 8.05 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்கும் 97.2 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. லிட்டருக்கு 70 கிலோமீட்டர் மைலேஜ் தருவதாக பைக்கின் மைலேஜ் குறித்து நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் இது ARAI மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளது. Hero HF 100 இன் ஆரம்ப விலை ரூ.51,200 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆகும்.
Bajaj CT 100
பஜாஜ் CT 100 பைக்கானது ஸ்டைல், மைலேஜ் மற்றும் அதன் விலை ஆகியவற்றிற்காக நன்கு விரும்பப்படுகிறது. இந்த பைக் 7.9 பிஎஸ் பவரையும், 8.34 மிமீ பீக் டார்க்கையும் உருவாக்கும் 102 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
இவை, லிட்டருக்கு 74 கிமீ மைலேஜ் தருவதாகவும், இந்த மைலேஜை ARAI சான்றளித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. பஜாஜ் CT 100 இன் ஆரம்ப விலை ரூ. 51,802 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆகும்.
Hero HF Deluxe
ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக்கானது என்பது நீண்ட மைலேஜ் மற்றும் கவர்ச்சிகரமான வடிவமைப்பு கொண்ட பைக் ஆகும். இதில் நான்கு வகைகளை நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது லிட்டருக்கு 83 கிலோமீட்டர் மைலேஜ் தருவதாகவும், இந்த மைலேஜை ARAI சான்றளித்துள்ளது என்றும் கூறியுள்ளது.
ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸின் ஆரம்ப விலை ரூ.54,480 ஆகும். இந்த விலை டாப் வேரியண்டில் ரூ.63,770 வரை செல்கிறது.
