உலகில் தற்கொலை அதிகமாக நடக்கும் டாப் நாடுகள்: இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் தற்போது தற்கொலை அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதற்கான காரணமாக விஜய் ஆண்டனி தரப்பிலிருந்து குழந்தைகளுக்கு அதிகமான மன அழுத்தம் என கூறப்படுகின்றது. ஆனால் உண்மையான காரணம் இன்று வரை வெளியாகவில்லை.
வயதானவர்களின் தற்கொலைகளை விட இளம் வயதில் இருக்கும் இளைஞர்களின் தற்கொலைகள் தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில் பிரபல குழுவொன்று நடத்திய ஆய்வில் அதிகமான தற்கொலை செய்து கொள்ளும் நாடுகள் பட்டியியல் படுத்தப்பட்டுள்ளது.
தற்கொலை அதிகமாகவுள்ள நாடுகள்
1. தென் ஆப்ரிக்கா
தென் ஆப்ரிக்கா இந்த விடயத்தில் 10-வது இடத்தில் இருக்கின்றது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 100,000 பேருக்கு 23.5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
அந்த நாட்டில் நிலவும் கடுமையான வறுமை காரணமாகவும், உதவியற்ற தன்மை காரணமாகவும் தான் இந்த தற்கொலைகள் இடம்பெறுகின்றது என தெரியவந்துள்ளது.
2. ரஷ்யா
உலக நாடுகளில் தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளில் ரஷ்யாவிற்கு 9 ஆவது இடம் இருக்கின்றது. இந்த நாட்டில் ரஷ்யாவில் பெண்களை விட ஆண்களின் தற்கொலை தான் அதிகமாக இருக்கும். இதற்கு என்ன காரணம் என ஆய்வு செய்து பார்த்ததில் அதிகமான மது பழக்கம் தான் காரணம் என தெரியவந்துள்ளது.
3. லுதுவேனியா
வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு சிறிய நாடாக லுதுவேனியா பார்க்கப்படுகின்றது. இங்கும் பெண்களை விட ஆண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள். காலம் செல்ல இதன் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
4. மைக்ரோனேசியா
மைக்ரோனேசியா என்பது மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுகளின் குழுவாகும், இது வறுமை, போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமை மற்றும் அதிக வேலையின்மை ஆகியவை முக்கிய காரணமாக இருக்கிறது. இங்கு போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் பொது சுகாதாரப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
5. இந்தியா
இந்த பட்டியலில் இந்தியா 40 வது இடத்தில் உள்ளது. 100,000 மக்களுக்கு 12.7 விகிதத்தில் மக்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். வளர்ந்து வரும் நகரமயமாக்கல், கல்வி நிலைகள், குறிப்பாக பெண்களிடையே அதிகரித்து வருதல் இதற்கான முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் தற்போது தற்கொலை வீதம் குறைந்துள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |