வலியை கடந்த எங்கள் தேசம்- கண்ணீர் விட்டழுத வாகீசன்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபற்றியிருக்கிறார் இலங்கையை சேர்ந்த வாகீசன்.
இந்நிகழ்ச்சியில் கோமாளிகளின் ரகளையுடன் சேர்த்து ருசியான புதுவிதமாக உணவுகளை சமைப்பதே போட்டியாளர்களின் திறமை.
இந்த வார நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமாரின் திரைகதாபாத்திரங்களை மையமாக கொண்டு கோமாளிகள் வேடமிட்டுள்ளனர்.
அதில், சிட்டிசன் பட பாணியில் கதிர் வேடமிட அப்படத்தில் வரும் முக்கியமான வசனத்தை நடித்துக்காட்டுகிறார்.
அத்திப்பட்டி கிராமமே இல்லாமல் போனதை கூறும் அந்த வசனத்தை கதிர் பேசிக்கொண்டிருக்கும் போதே போட்டியாளர் வாகீசன் கண்கலங்கிவிட்டார்.
கடைசியில், வீரம் வீரம் என்று பேசினாலும் வலியை கடந்த தேசம் எங்கள் தேசம், நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் என்னால் உணர முடிந்தது என அவர் கண்ணீருடன் பேசிய வார்த்தைகளுக்கு ஒட்டுமொத்த அரங்கமே அமைதியானது.