டிஆர்பியில் எகிறும் டாப் குக்கு டூப் குக்கு- மூன்று பைனலிஸ்ட் இவர்கள் தான்..யார்யார் தெரியுமா?
டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் பைனலிஸ்ட்டுக்கு 3 போட்டியாளர்கள் தெரிவாகியுள்ளனர்.
டாப் குக்கு டூப் குக்கு
பிரபல தொலைக்காட்சியில் தற்போது டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் நிகழ்ச்சி தான் டாப் குக்கு டூப் குக்கு. இந்த நிகழ்ச்சியில், வெங்கடேஷ் பட் நடுவராக இருக்கிறார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கமைய “டாப் குக்கு டூப் குக்கு” நிகழ்ச்சி கடந்த மே 19ஆம் தேதி ஆரம்பமானது.
நிகழ்ச்சியில் டாப் குக்காக பெப்சி விஜயன், சாய் தீனா, சோனியா அகர்வால், சுஜாதா சிவகுமார், சிங்கம்புலி, ஐஸ்வர்யா தத்தா, ஷாலிநிவாஸ், நரேந்திர பிரசாத், சைத்ரா ரெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு டூப் குக்காக தீபா, அதிர்ச்சி அருண், பாரத், தீனா, மோனிஷா, ஜிபி முத்து, விஜய், முகுந்த், சௌந்தர்யா, கதிர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்கள் மூன்று அணியாக பிரிக்கப்பட்டு மூன்று செஃப் வழிநடத்தி வருகிறார்கள்.
இதன்படி, மூன்று செஃப்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று டாப் குக்குகளை வைத்து சமைப்பார்கள். நிகழ்ச்சியில் டாப் குக்குகள் எலிமினேஷன் ஆகி வெளியேறும் போது அவர்களுக்கு பயிற்சி கொடுத்த செஃப்களும் எலிமினேஷன் செய்யப்படுவார்கள்.
டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி பார்த்த பலர் இது CWC-ன் காப்பி என்று கூறினார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது தான் அந்த நிகழ்ச்சியை விட இது வித்தியாசமாக இருக்கின்றது என தெரிகிறது.
பைனலிஸ்ட்டுக்கு தெரிவான போட்டியாளர்கள்
இந்த நிலையில், நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு 20 லட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் டாப் குக்கள் தங்களால் முடிந்தளவு முயற்சி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த வாரம், பைனலிஸ்ட் போட்டியாளர்களுக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டி ஆரம்பமானது. நான்கு போட்டியாளர்களிலிருந்து சைத்ரா ரெட்டி , சுஜாதா சிவகுமார், சுபாஷ் ஆகியோர் பைனலிஸ்ட்டாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் இணைந்து அவர்களுக்கு பயிற்சி வழங்கிய செஃப்களும் டைட்டில் வின்னருக்கான போட்டியில் போட்டியிட போகிறார்கள்.
பிரபலங்கள் பைனலிஸ்ட்டாக தெரிவாகும் காட்சியுடன் கடந்த வாரம் ப்ரோமோ வெளியாகியுள்ளது. யார் டைட்டில் வின்னர் ஆவார் என்பதனை தொடர்ந்து வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |