அடிக்கடி பராசிட்டமால் பாவிப்பவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்
பொதுவாக தற்காலத்தில் லேசான காய்ச்சல், உடல்வலி என்ற உடனேயே நம்மில் பலரும் உடனே எடுத்துக்கொள்ளும் மருந்து பாராசிட்டமால் தான்.
இன்னும் சிலர் மாதவிடாய் காலத்திலும் கூட பராசிட்டமால் எடுத்துக் கொள்வார்கள். இது உடனடி வலி நிவாரணியாக காணப்படுகின்றது.
ஆனால் இவ்வாறு எதற்கெடுத்தாலும் மருத்துவரின் பரிந்துரையின்றி பராசிட்டமோல் எடுத்துக்கொள்வது மிகவும் மோசமானதும் ஆபாயகரமானதுமான விளைவை ஏற்படுத்தும்.
கல்லீரல் பாதிப்பு
ஆய்வுகளின் அடிப்பமையில் அதிகளவு பராசிட்டமால் பாவிப்பது கல்லீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
முதுகுவலி மற்றும் கீல்வாதத்திற்கு சிகிச்சையளிக்க பாராசிட்டமால் எடுத்துக்கொள்வது வாழ்க்கை முறையை மேம்படுத்தாது என்று ஒரு ஆய்வு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பாராசிட்டமால் எடுத்துக்கொண்ட பிறகு வயிற்று வலி ,எரிச்சல் ,பலவீனம் ,பசியின்மை , வயிற்றுப்போக்கு , குமட்டல் உணர்வு , எச்சில் அல்லது வாந்தியுடன் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் இது மிகவும் ஆபத்தான நிலை.
பாராசிட்டமால் எடுத்துக்கொண்ட பிறகு மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
இந்த மருந்தை அதிகமாக உட்கொள்வது கல்லீரல் சேதமடையும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |