உங்க நாக்கு இப்படி இருக்கா? இந்த சத்து குறைபாடாக இருக்கலாம்
நம் உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அனைத்து சத்துகளும் அத்தியாவசியமான ஒன்று.
குறிப்பாக எலும்புகள் மற்றும் பற்களின் பராமரிப்புக்கு விட்டமின் டி அவசியம், இது குறைவாக இருந்தால் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
உடல் பருமன், நீரிழிவு நோய் போன்றவை விட்டமின் டியின் அறிகுறிகளாகும், இது தவிர நம்முடைய நாக்கின் ஆரோக்கியத்தின் மூலமும் இதனை தெரிந்து கொள்ளலாம்.
அடிக்கடியோ அல்லது தொடர்ச்சியாகவோ வாய், உதடுகள் மற்றும் நாக்கில் வலியோ அசவுகரியமோ உண்டானால் அதுவும் வைட்டமின் டி பற்றாக்குறைக்கான ஆரம்பக்கட்ட அறிகுறியாக அமையலாம்.
கன்னத்தின் உள் அடுக்கு பகுதிகளிலும் பாதிப்பை உணர முடியும். சில சமயங்களில் எரிச்சல் உணர்வு கடுமையாக இருக்கும்.
இதுதவிர நாக்கில் எரிச்சல் உணர்வு, வாயின் உள் அடுக்கு பகுதியில் வலி, தொண்டை வலி, தொண்டை வறட்சி, வாயில் உணர்வின்மை, நாக்கு கூசுதல், சாப்பிடும்போது உணவின் சுவை மாறுபடுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது.
இதனை தடுப்பது எப்படி?
தினமும் அதிகாலை நேரம் சுமார் 15 நிமிடங்களாவது சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.
மீன், தயிர், குறைந்த கொழுப்புள்ள பால், காளான், ஆரஞ்சு பழச்சாறு போன்றவற்றை அருந்த வேண்டும்.
மிக முக்கியமாக கால்சியம் அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
வைட்டமின் கே, மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற மற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளையும் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள், ஏனெனில் இது விட்டமின் டி உறிஞ்சுதலை துரிதப்படுத்தும்.
மருத்துவர்கள் பரிந்துரைத்தால் விட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
தானிய வகைகளையும் உணவில் தவறாமல் இடம்பெற செய்ய வேண்டும்.