அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெற்றோர்! வீட்டில் மணப்பெண் கிடந்த கோலம்
நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில் இளம்பெண் ஒருவர் விஷம் அருந்து தற்கொலை செய்த கொண்டது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வாயில் நுரை தள்ளிய நிலையில் மணப்பெண்
மதுரை திருமங்கலம் ஜவகர் நகரை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம். இந்த தம்பதிகளின் இரண்டாவது மகள் வினோதினி(26)என்ற மகள் உள்ள நிலைில் இவருக்கு பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்ததுடன், உறவினர்கள் வீட்டிற்கும் பத்திரிக்கை கொடுத்தும் வந்துள்ளனர.
இந்நிலையில் வழக்கம் போல் பெற்றோர்கள் உறவினர் வீட்டிற்கு அழைப்பிதழ் கொண்டு சென்ற பின்பு மணப்பெண் விஷம் அருந்திவிட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடியுள்ளார்.
உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வினோதினி சில மாதங்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்ததும், பல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருந்துள்ளாராம்.
மேலும் திருமணம் வேண்டாம் என்றும் கூறிவந்திருந்த நிலையில், வீட்டில் பெற்றோர் இல்லாத நிலையில், இவ்வாறு தவறான முடிவை எடுத்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.