தக்காளியை தவிர்க்கும் ஆண்களுக்கு இந்த ஆபத்து நிச்சயம்
பொதுவாகவே சைவ உணவாக இருந்தாலும் அசைவமான இருந்தாலும் தக்காளி மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. நம்மில் பலரும் தக்காளியை உணவிற்கு அழகு சேர்க்கும் பொருளாகவே அதிகம் பயன்படுத்துகின்றோம்.
ஆனால் தக்காளியில் அடங்கியிருக்கும் ஏராளமான சத்துக்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் சரும அழகுக்கும் மிகவும் இன்றியமையாத விடயமாக காணப்படுகின்றது.
குறிப்பாக ஆண்களை பொருத்தவரையில் தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
தக்காளியில் மருத்துவ குணங்கள்
உணவில் தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களைத் தாக்கும் இரண்டாவது பெரிய புற்றுநோயான புராஸ்டேட் புற்று தாக்கும் அபாயத்தை 20 சதவீதத்ததால் குறைத்துக்கொள்ள முடிகிறது.
மேலும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவும். குறிப்பாக ஆண்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 10 இற்கும் மேற்பட்ட தக்காளிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இதன் மூலம் புற்றுநோய் ஆபத்து கணிசமாக குறைகின்றது. வைட்டமின் -சி மற்றும் இரும்புச்சத்து அதிகமாகவுள்ளதால் குருதிச் சோகையை குணப்படுத்துவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
தக்காளியில் அதிகமாக காணப்படும் பீட்டா கரோட்டின் எனும் வேதிப்பொருள் கண்பார்வை தொடர்பான பிரச்சினைகளை சீர்செய்கின்றது.
தக்காளியில் வைட்டமின் - ஏ சுமார், வைட்டமின்- பி1, பி2, வைட்டமின் -சி, -, கால்சியம் ஆகிய சத்துக்கள் உள்ளன.
இது உடலில் இரத்த உற்பத்திக்கு (Blood Production) பயன்படுவதோடு மட்டுமின்றி, இரத்தத்தைச் சுத்திகரிக்கவும், சீரான ரத்த ஓட்டத்துக்கும் பயன்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |