தக்காளியை அளவுக்கு மீறி உணவில் சேர்ப்பதால் என்ன பக்கவிளைவுகள் ஏற்படும் தெரியுமா?
தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ள ஓர் ஆரோக்கிய உணவு என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.
இப்பழத்தில், உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்களும், மேலும் வைட்டமின் சத்துக்களும் ஏராளமாய் அமைந்துள்ளன.
என்னத்தான் தக்காளியில் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது சில பாதிப்புகளும் உண்டாகும்.
அந்தவகையில் தற்போது தக்காளியை அதிகமாக உட்கொள்ளுவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன பார்க்கலாம்.
பொதுவாகவே தக்காளியில் ஆசிட் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். எனவே அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது உடலில் ஆசிட் அதிகரித்து நெஞ்சு எரிச்சல், வாயுத் தொல்லை , செரிமானப் பிரச்சினை போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் கட்டாயம் பொட்டாசியம் உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தக்காளியில் பொட்டாசியம் நிறைவாகவே உள்ளது.
அதோடு ஒசலேட் அதிகம் உள்ளதால் சிறுநீரக பாதிப்பை சந்திக்க நேரும். ஏற்கனவே குடல் எரிச்சல், குடல் வீக்கம் என குடல் பாதிப்புகள் இருந்தால் தக்காளியை வழக்கத்தை விட குறைவாக பயன்படுத்துவது நல்லது.
இல்லையெனில் நீங்கள் அடிக்கடி வயிற்று மந்தம், அலர்ஜி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். தக்காளியை அதிகமாக உட்கொள்வது சோலனைன் எனப்படும் ஆல்கலாய்டு நிரம்பியிருப்பதால் மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலி ஏற்படக்கூடும்.
திசுக்களில் கால்சியத்தை உருவாக்குவதற்கு சோலனைன் உதவியாக இருக்கிறது. எனவே சோலனைன் அதிகரிக்கும்போது வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.
நீங்கள் தக்காளி ஒவ்வாமை இருந்தால், வாய், நாக்கு மற்றும் முகத்தின் வீக்கம், தும்மல் மற்றும் தொண்டை தொற்று போன்றவற்றை அனுபவிக்கலாம். இதற்கிடையில் தக்காளி ஒவ்வாமை தோல் அழற்சியையும் ஏற்படுத்தும். நீங்கள் ஒவ்வாமை இருந்தால் தக்காளியை அதிகம் சாப்பிடுவதன் மூலம் தோலில் கடுமையாக அரிப்பு மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.