கண்பார்வையை சீராக்கும் தக்காளி பாயாசம்... இவ்வளவு எளிமையா செய்யலாமா?
பொதுவாகவே இந்திய சமையலில் முக்கிய இடம் பிடிக்கும் தக்காளியில் வைட்டமின் ஏ, சி அதிகளவில் காணப்படுவதால் இது சருமத்தில் பெலிவை அதிகரிப்பதுடன், உடலில் நேயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவையும் காணப்படுகின்றது.
தக்காளியில் மாவுச்சத்து குறைவாக இருப்பதனால், சர்க்கரை நோயாளிகளும் உணவில் தயக்கமின்றி சேர்த்துக்கொள்ளலாம்.
குறிப்பாக தக்காளியில் செரிந்து காணப்படும் பீட்டா கரோட்டின் பார்வை கோளாறுகளை தடுத்து ஆரோக்கியமான பார்வையை வழங்குகின்றது.
உடல் வறட்சியை கட்டுப்படுத்தி நீரேற்றமாக பார்த்துக்கொள்ள தினமும் அதிகளவு தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டியது அவசியம்.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள தக்காளியில் பாயாசம் செய்யலாம் என்றால், நம்பமுடிகின்றதா, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் தக்காளி பாயாசம் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தாக்காளிப்பழம் - 4
வெல்லம் - 100 கிராம்
முந்திரி பருப்பு - 10
நெய் - சிறிதளவு
தேங்காய், ஏலக்காய், தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை் ஊற்றி தக்காளியை சேர்த்து நன்றாக வேகவிட வேண்டும்.
அது நன்றாக வெந்து குழைந்தன் பின்னர் அதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, துருவிய தேங்காயையும் அதில் அரைத்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த கலவையானது, பாயாசம் பதத்துக்கு வந்ததும், நெய்யில் வறுத்த முந்திரி, ஏலாக்காய் துாள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில், ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த 'தக்காளி பாயாசம்' தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |