குழந்தைகளை குறிவைக்கும் தக்காளி காய்ச்சல்! அறிகுறிகள் என்னென்ன?
கேரளாவில் சில மாவட்டங்களில் தக்காளி வைரஸ் என்று அழைக்கப்படும் புதிய வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த நோய் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அண்டை மாநிலமான தமிழகத்திலும் இந்த தக்காளி காய்ச்சல் பரவுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் வைரஸ் பற்றி அச்சப்பட தேவையில்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? இந்த வைரசுக்கான அறிகுறிகள் என்ன என்பதையும், இதற்கான சிகிச்சை முறைகளையும் அறிந்து கொள்ளலாம்.
அறிகுறிகள்
இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில், உடலில் கிட்டத்தட்ட தக்காளி அளவு சொறி வெளியேறும். தோலில் எரியும் உணர்வு ஏற்படலாம். நீரிழப்பு அறிகுறிகள் நாக்கில் உலர்ந்த வாயுடன் சேர்ந்து தோன்றும்.
அதிக காய்ச்சல், உடல் வலி, மூட்டுகளில் வீக்கம், சோர்வு, தக்காளி வடிவில் சொறி, கைகளின் நிறமாற்றம், முழங்கால்களின் நிறமாற்றம் என அறிகுறிகள் காணப்படும்.
சனியின் வக்ர பெயர்ச்சியால் கொட்டும் அதிர்ஷ்டம்! 75 நாட்களுக்கு ராஜயோகம் பெறும் 3 ராசிகள்
தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை
குழந்தைக்கு இந்த அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள மருத்துவரை அணுகவும்.
தொற்று நோய் உள்ளவர்களிடம் இருந்து குழந்தைகளை விலக்கி வைக்க வேண்டும்.
நோயாளிக்கும் அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தூய்மையை பராமரிப்பது முக்கியம்.
பல சமயங்களில் காய்ச்சல் ஒரு வாரம் நீடிக்கும் என்பதால் சரியான ஓய்வு தேவை.
