கண்ணாடி போல் சருமம் ஜொலிக்க வேண்டுமா? 5 நாட்களுக்கு இதை முகத்தில் தடவினால் போதும்
சருமத்தை செயற்கை பொருட்களை கொண்டு அழகுபடுத்தும் போது உடனடி அழகை சருமம் பெற்றுக்கொடுக்கிறது. ஆனால் இது நிலையானது அல்ல. இயற்கையில் காணப்படும் பல பொருட்களை கொண்டு சருமத்திற்கு அழகை சேர்க்கும் போது இது நமது அழகை மேன்படுத்துவதுடன் ஆரோக்கிய சருமத்தையும் கொடுக்கும்.
அப்படி ஒரு இயற்கை பொருட்களில் ஒன்று தான் தக்காளி. இதில் வைட்டமின்கள் A, C , பீட்டா கரோட்டின், சல்பர், குளோரின், நார்ச்சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
குறிப்பாக தக்காளியில் வைட்டமின் சி இருப்பதால் முகப்பருவை நீக்கி, சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இதை பயன்படுத்துவதால் இறந்த செல்களை நீக்குகிறது. இந்த தக்காளி சாற்றை முகத்தில் சேர்க்கும் எதனுடன் சேர்த்து தடவினால் பொலிவை பெறும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கண்ணாடி போன்ற சருமம்
தக்காளி சமையலுக்கு பயன்படுத்தினாலும் இத சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.தக்காளியுடன் செய்யப்படும் ஃபேஸ் பேக்குகள் சருமத்திற்கு புத்துணர்ச்சியைத் தருகிறது.
தக்காளி துண்டை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தேய்த்து விட்டு 15 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நல்ல பலன் கொடுக்கும். பருக்கள் முகத்தில் குவியாது.
வெயிலில் செல்லும் போது ஏற்படும் சன் டேன்பிரச்சனைகள் நீங்கும். தக்காளிச் சாறு உடன் தேன் அல்லது வெல்லம் அல்லது எண்ணெயுடன் கலந்து சிறிது நேரம் சருமத்தில் வைத்தால், சருமத்தில் ஈரப்பதம் அதிகரித்து முகப்பருக்கள் நீங்கும் அழகுக்கலை நிபுணர் குறுகின்றனர்.
எண்ணெய் சருமம் கொண்டவர்கள் தக்காளி பயன்படுத்தலாம்.தக்காளியில் சாலிசிலிக் ஆசிட் நிறைந்துள்ளதால், அது சருமத்தில் எண்ணெய் பசை உருவாவதை தடுக்கிறது. தக்காளி துண்டை எடுத்து சருமத்தில் மெதுவாக மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீக்கி பிரகாசமான சருமத்தை பெறலாம்.
சரமத்தில் பலருக்கும் துளை இருக்கும் இதை போக்க தக்காளி ஜூஸ் உடன் எலுமிச்சை சாறு கலந்து, அதனை காட்டன் துணி மூலம் முகத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்வதால் சருமத்தில் ஏற்படும் துளைகள் சரியாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |