ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் விதியானது ராசி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், அவர்களின் ஜாதகம் அடிப்படையில் தான் வேலை, பொருளாதார நிலை, திருமணம் என்பவை நிர்ணயிக்கப்படுகிறது.
இதன்படி, சுக்கிரன் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை தன்னுடைய ராசியை மாற்றுவார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கு இருக்கும். அப்படியாயின் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
செல்வத்திற்கும், செழிப்பிற்கும் காரணியான சுக்கிரன் ஜனவரி 28 ஆம் தேதி, மீன ராசிக்குள் நுழைந்துள்ளார். இதன் விளைவாக மங்களகரமான மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும் சில ராசிகளுக்கு செல்வம் அதிகரிக்கும்.
அந்த வகையில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ள ராசிகள் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சுக்கிரன் பெயர்ச்சி
மேஷ ராசி
இன்று எதிலும் அவசரம் வேண்டாம்.
குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் கிடைக்கும்.
ரிஷபம் ராசி
மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).