பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள்
பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகை லட்சுமி பிரியா வெளியேற்றப்பட்டதாக தகவர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 10
சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசன், விஜய் தொலைக்காட்சியில் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி பிரம்மாண்டமாகவும் பல அதிரடி திருப்பங்களுடனும் தொடங்கியது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் புதுமையான போட்டிகள், எதிர்பாராத சம்பவங்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் என பல்வேறு விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.
அந்த வகையில், 10வது சீசனின் தொடக்கத்திலேயே இதுவரை வந்த சீசன்களில் இல்லாத சில விஷயங்கள் இடம்பெற்றதால், இந்த சீசன் எப்படி செல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை, கருத்து மோதல் என பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால், வரும் நாட்களில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் மேலும் எந்த அளவுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த எபிசோடில் போட்டியாளர்களில் ஒருவரான மணிவண்ணன் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இந்த எலிமினேஷன் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு போட்டியாளர் தொடர்பான தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சுமி ப்ரியா வெளியேற்றம்
அதன்படி, லட்சுமி ப்ரியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, லீடருக்கான Exit Poll முடிவுகளின் அடிப்படையில் அவர் எலிமினேட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும், இந்த தகவல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே லட்சுமி ப்ரியாவின் எலிமினேஷன் குறித்த முழுமையான விவரம் தெரியவரும்.
பிக்பாஸ் 10வது சீசன் தொடங்கிய சில நாட்களிலேயே அடுத்தடுத்து எலிமினேஷன் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருவது, நிகழ்ச்சியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |